Posted in

செங்கோட்டையனை பார்த்தால் எழுந்து நிற்கவேண்டிய எடப்பாடி: சபாநாயகர் ஆகும் செங்கோட்டையன் !

இனி செங்கோட்டையனைச் சட்டமன்றத்தில் பார்த்தால் எழுந்து நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் எடப்பாடி! ஆம், தற்காலிகச் சபாநாயகராகச் செங்கோட்டையனை நியமிக்க விஜய் விரும்பியுள்ளதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதற்கு அமைவாகச் செங்கோட்டையன் தற்போது சட்டமன்றம் மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகம் சென்று அதிகாரிகளோடு பேசியுள்ள வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

இது இவ்வாறு இருக்க, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியது போல அதிமுக கட்சியிலிருந்து செங்கோட்டையனைத் தூக்கி எறிந்தவர் எடப்பாடியார். அதாவது செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் (MGR) கால கட்டத்திலிருந்து இருந்திருக்கிறார், செல்வி ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதற்குக்கூட மதிப்புக் கொடுக்காமல் அவரை வெளியே தூக்கி எறிந்தவர் எடப்பாடி. ஆனால் இன்றைய நிலையைப் பார்த்தீர்களா?

யாரைத் தூக்கி வெளியே விட்டாரோ அவரைப் பார்த்ததும் எழுந்து நிற்க வேண்டியிருக்கிறது. இதனைத்தான் காலம் என்பார்கள். அதிகாரம் கையில் இருக்கிறது என்று ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடிய ஸ்டாலின் தோற்றுப் போய் மூலையில் முடங்கிக் கிடக்க, மறுமுனையில் எடப்பாடியார் கட்சியில் உட்பூசல் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் எடப்பாடியைச் சந்தித்து, விஜய் கட்சியோடு இணைய வேண்டும் இல்லை என்றால் பிரிவு ஏற்படும் என எச்சரித்துள்ளார்கள். இதனால் எடப்பாடியார் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.