Posted in

ஆளுநர் நாளை கேரளா செல்கிறார் – மாஸ்டர் பிளான் போட்டு கவிழ்க்கும் மத்திய அரசு!

இன்று ஆளுநரைச் சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். அதனை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறவில்லை. தாம் பதில் அனுப்பி வைப்பதாகக் கூறி விஜய்யை அனுப்பி வைத்த ஆளுநர், நாளை கேரளா செல்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை விஜய் காட்டிய பின்னரே, விஜய்யின் பதவிப் பிரமாணத்தை ஆளுநர் செய்வார் என்று தெரிகிறது.

இதனூடாக மத்திய அரசு பெரும் சித்து விளையாட்டில் இறங்கியிருக்கிறது. முதலில் ‘ஜனநாயகன்’ படத்தைத் தடுத்தார்கள், பின்னர் சுற்றுப்பயண அனுமதிகளைத் தடுத்தார்கள், கரூர் சம்பவத்தில் விஜய்யை அழைத்து விசாரித்து வழக்கைப் பாதியில் வைத்திருக்கிறார்கள். தற்போது விஜய் முதல்வர் ஆவதை எந்த அளவு தடுக்க முடியுமோ அந்த அளவு தடுத்துள்ளது மத்திய அரசு. ஆளுநர் என்பவர் மத்திய அரசால் நியமிக்கப்படுபவர், அவர் ஒரு மத்திய அரசின் ஏஜென்ட் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இந்த இடத்தில் மோடி அரசு பெரும் உத்தியைக் கையாண்டு வருகிறது. அதாவது நாளை விஜய் முதலமைச்சர் ஆகினால், அவரை நோக்கிப் பல சட்டமன்ற உறுப்பினர்கள் சென்று விடுவார்கள் அல்லவா? இதனால் அதிமுக பேரம் பேசும் நிலையில் இருக்க முடியாது, நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுக்க வேண்டி வரும். ஆனால் இப்படி ஒரு இக்கட்டான நிலையை விஜய்க்குத் தோற்றுவித்தால், அதிமுக தற்போது பேரம் பேச ஆரம்பிக்கும். குறைந்தபட்சம் 5 அமைச்சர்கள் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களைக் கோரும்.

இதனை வைத்தே மத்திய அரசு ஒரு கீழ்த்தரமான செயலில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. எந்த வகையிலாவது விஜய் பதவியேற்பைத் தடுக்க வேண்டும், இல்லையேல் விஜய்யை அடிபணிய வைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து விஜய்க்கு ஆதரவு கொடுப்பதே நல்லது.