தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி நடக்கிறதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. மக்களின் ஏகோபித்த ஆதரவு விஜய்க்கு இருப்பதாலும், 108 ஆசனங்களைத் தனிப்பெரும் கட்சியாகப் பெற்றிருப்பதாலும், அவரே அடுத்த முதல்வர் என்று தெரிந்ததால், அவருக்கு முதலமைச்சர் செல்லும் வாகனத் தொடரணி கார்கள் 12 கொடுக்கப்பட்டன. கடந்த 2 தினங்களாக இந்த வாகனத்தையே விஜய்யும் பயன்படுத்தி வந்த நிலையில்..
நேற்று (06) இரவிலிருந்து இந்த வாகனங்களை விஜய் வீட்டிலிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உத்தரவை யார் பிறப்பித்தது என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதலமைச்சராக இல்லை; ஒரு பெயரளவில்தான் முதல்வராக இருக்கிறார். அவர் இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்க வாய்ப்பே இல்லை. இதனை மக்கள் அறிந்தால் ஸ்டாலின் மேல் மக்களின் வெறுப்பு இன்னும் அதிகமாகும்.
எனவே, இந்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளதா? எப்படி மத்திய அரசு மாநில அரசின் எல்லைக்கு உள்ளே சென்று தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்பச் செயல்படுகிறது என்ற பெரும் கேள்வி எழுகிறது. காங்கிரஸ் கட்சி வந்து விஜய்யுடன் இணைந்த அடுத்த விநாடியிலிருந்து, விஜய்யைப் பழிவாங்க ஆரம்பித்துள்ளது ஆளும் மத்திய பிஜேபி (BJP) அரசு. இதனை இவர்கள் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள்.
இதுநாள் வரை “நாங்கள் பிஜேபி கட்சியை எதிர்க்கிறோம்” என்று வெளிப்படையாகக் கூறி அரசியல் செய்து வந்த திமுக அரசுக்கே இந்த அளவு நெருக்கடியைப் பிஜேபி கொடுத்ததே இல்லையே? அப்படிப் பார்த்தால் விஜய் மேடைகளில் கூறுவதைப் போல, பிஜேபி கட்சியோடு ஓர் “அண்டர் கிரவுண்ட்” டீலில் தான் இதுநாள் வரை திமுக இருந்துள்ளது வெட்டவெளிச்சமாகிறது. இந்திய அரசியல் வரலாற்றில் இப்படியெல்லாம் நிகழ்ந்ததே இல்லை என்று கூறலாம். தற்போது ஆளுநர் கேரளாவுக்குத் தப்பியோடியுள்ள நிலையில், மீண்டும் எப்போது வருவார் என்பது தெரியவில்லை. இதே நிலை நீடித்தால் மறுதேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய சூழ்நிலை வரும். விஜய்யைத் தொடர்ந்து இவ்வாறு மத்திய மற்றும் திமுக போன்ற சக்திகள் துன்புறுத்தி வந்தால், விஜய்க்கான ஆதரவு பன்மடங்கு பெருகும் என்ற விஷயத்தைக் கூடவா இவர்கள் அறியவில்லை?