Posted in

TTV தினகரன் சொல்லும் பொய் – BJP கட்சியின் பினாமியாக மாறிச் செயல்படுகிறார்!

அமமுக கட்சித் தலைவர் TTV தினகரன், பல ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருகிறார். முதலில் தனது கட்சியின் ஒரே சட்டமன்ற உறுப்பினரைக் காணவில்லை என்று கூறினார்; தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறி, ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் வெளியே வந்த நிலையில், அங்கே திடீரெனத் தொலைந்ததாகக் கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் அவர்கள் வழக்கறிஞரோடு வந்து நின்றார்.

இதனை அடுத்து அங்கே வைத்துப் பேட்டி கொடுத்த TTV தினகரன், தவெக கட்சி ஆளுநருக்கு வாட்ஸ்அப் மூலம் காமராஜ் கடிதம் கொடுத்தது போல ஒரு போலிக் கடிதத்தைக் கொடுத்துள்ளதாக முதலில் கூறினார். பின்னர் “இல்லை இல்லை.. விஜய் தான் இந்தக் கடிதத்தைக் கொடுத்தார்” என்று பிளேட்டைத் திருப்பிப் போட்டார். இதேவேளை, “ஏன் உங்களை TTV தினகரன் தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது நீங்கள் தொடர்பு கொள்ளவில்லை?” என நிருபர்கள் சரமாரியாகக் கேள்வி கேட்க, காமராஜ் திண்டாடினார்; “போன் வேலை செய்யவில்லை” என்றார், பின்னர் “போன் என் கையில் இல்லை” என்று மாற்றி மாற்றி உருட்டினார்.

இங்கே உண்மையில் என்ன நடந்தது? நேற்று காலையில் வெளியான செய்திகளில் முகத்தை மூடி மறைத்துக்கொண்டு ஒரு நபர் இன்னோவா காரில் விஜய் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த காமராஜ் என்னும் TTV தினகரனின் ஆள், அங்கே சென்று தான் தவெகவில் இணைவதாகக் கூறி ஒரு கடிதத்தைக் கொடுத்திருக்கலாம். அந்த கடிதத்தை விஜய் அவர்கள் எடுத்துச் சென்று ஆளுநரிடம் கொடுத்த பின்னர், “தான் அந்தக் கடிதத்தைக் கொடுக்கவில்லை” என்று தற்போது பத்திரிகையாளர் முன் தோன்றிப் பேட்டி கொடுக்கலாம். இது நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

இல்லையென்றால் TTV தினகரனின் கைக்கூலிகள் யாரோ இப்படி ஒரு கடிதத்தை வாட்ஸ்அப்பில் ஆளுநருக்கு அனுப்பி வைத்து விட்டுப் பின்னர் நாடகம் ஆடியிருக்கலாம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் நன்றாகப் புரிகிறது. BJP கட்சி என்ன சொல்கிறதோ, அதனையே எடப்பாடி மற்றும் TTV தினகரன் செய்து வருகின்றனர். இப்படி ஒரு பெரும் நாடகம் ஆடி, ஆளுநரிடம் விசாரணை நடக்க வேண்டும் என்று கோரியுள்ளார் TTV. இதனால் பதவியேற்பு தள்ளிப்போய், 10-ம் தேதி இரவு முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழகத்தில் தோன்றும்.

பின்னர் 6 மாதம் கழித்தே மீண்டும் தேர்தல் வரும்; இல்லையென்றால் 12 மாதம் கழித்துக்கூடத் தேர்தல் வரலாம். அதுவரை மத்திய அரசின் ஆட்சி தமிழகத்தில் இருக்கும். இந்த 12 மாதத்தில் BJP என்னவெல்லாம் செய்ய நினைத்ததோ அத்தனையையும் BJP செய்து முடித்துவிடும்; தமிழகத்தைக் கைப்பற்றிவிடும். இந்த நிகழ்ச்சி நிரலுக்கு TTV தினகரன் துணைபோவது ஒரு தமிழினத் துரோகம் ஆகும். எந்த விதமான ஒரு ஈனப் பிறவியாக இந்த TTV தினகரன் இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்!

அதிலும் எடப்பாடி! தான் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை, விஜய் ஆட்சிப் பீடத்தில் ஏறிவிடக் கூடாது, BJP ஆட்சி தமிழ்நாட்டில் வரவேண்டும் என்று விரும்புகிறார். இப்படி ஒரு துரோகத்தையும் ஈனத்தனமான வேலையையும் செய்ய எப்படி இவர்களுக்கு மனம் வந்தது? மக்கள் தான் நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்!