2026 தேர்தல் பரப்புரைகளில், ஆளும் தி.மு.க அரசின் மீதான அதிருப்தியைப் பேசாமலும், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க-வின் இனவாத அரசியலை எதிர்க்காமலும், விஜய்யை வாய்க்கு வந்தபடி விமர்சித்து வந்தார் செந்தமிழன் சீமான். இவருடைய இந்த அணுகுமுறை, கட்சியின் கொள்கை மீது இணக்கம் கொண்டிருந்த பல இளைஞர்களை முகம் சுளிக்க வைத்தது. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான சீமானின் தொண்டர்கள் கொத்துக் கொத்தாக விஜய்யின் த.வெ.க-வில் இணைந்துவிட்டனர்.
விஜய் குறித்துப் பேச வேண்டாம், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலர் அறிவுரை கூறியும் சீமான் கேட்பதாக இல்லை. மேடைகளில் மிகவும் தரக்குறைவாக விஜய்யை விமர்சித்து வந்தார். விஜய்யை விட அதிக வயதும் அரசியல் பக்குவமும் கொண்ட சீமான், ஏன் இப்படித் திடீரென மாறினார் என்று தெரியவில்லை. ஆனால், வயதில் இளையவரான விஜய் மட்டும் சீமானை எந்த இடத்திலும் ஒரு சிறு விமர்சனம் கூடச் செய்யவில்லை.
விஜய் மிகவும் அரசியல் நாகரிகத்தோடு நடந்து கொண்டார். ஆனால் சீமான் மட்டும் பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசி வந்த நிலையில், தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டன. தேர்தலில் வீசிய ‘விஜய் சுனாமி’யில் அண்ணன் சீமான் காணாமல் ஆக்கப்பட்டார். போட்டியிட்ட இடங்களில் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, வைப்புத் தொகையை (Deposit) இழந்தார்.
அவரது கட்சியின் வாக்கு வங்கி வெறும் 3 சதவீதத்தைத் தாண்டிய நிலையில், நாம் தமிழர் கட்சி தனது அங்கீகாரத்தையே இழந்து நிற்கிறது.