திமுக ஆட்சிக் காலத்தில் வகுப்பறைகளில் பழைய கரும்பலகைகளை நீக்கி, ‘ஸ்மார்ட் வகுப்பறை’ என்ற பெயரில் 65 அங்குல டிவி (TV) ஸ்கிரீன்களை அறிமுகம் செய்தது அன்றைய அரசு. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசிடம் இருந்து ₹1,000 கோடியைப் பெற்ற திமுக, அதற்கான ஒப்பந்தத்தை ஒரு கேரள நிறுவனத்திடம் கொடுத்திருந்தது. இந்த நிறுவனம், திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பினாமி கம்பெனி என்று கூறப்படுகிறது.
குறிப்பிட்ட அந்தப் பினாமி நிறுவனம், சீனாவிடம் இருந்து மிகவும் மலிவான மற்றும் தரம் குறைந்த 65 அங்குல ஸ்கிரீன்களை இறக்குமதி செய்து, வெறும் ₹100 கோடியிலேயே இந்த ஒட்டுமொத்தத் திட்டத்தையும் முடித்துவிட்டதாம். மீதமுள்ள ₹900 கோடியை அந்த நிறுவனம் முறைகேடாகச் சுருட்டிவிட்டதாக, திமுகவில் இருந்து பிரிந்து தவெகவில் (TVK) இணைந்த முக்கியப் புள்ளி ஒருவர் தகுந்த ஆதாரங்களுடன் போட்டுக் கொடுத்துள்ளார். இதையடுத்து, அது சம்பந்தமான ரகசியக் கோப்புகளைத் தவெக அரசு தற்போது தூசி தட்டி எடுத்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் இந்த முக்கிய ஆவணங்கள் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், அன்பில் மகேஷ் மீது விரைவில் ஊழல் வழக்குத் தொடுக்கப்பட பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. சம்பந்தப்பட்ட கேரள நிறுவனத்தின் உள்விவர ஆவணங்களையும் தவெக அரசு கைப்பற்றியுள்ளதோடு, இது தொடர்பாகக் கேரள அரசின் உதவியும் நாடப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால் திமுக கோட்டையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கரூர் சம்பவத்தைச் சினிமா படம் போல மாற்றி, “படிச்சு படிச்சு சொன்னேனடா” என்று அழுது நாடகம் ஆடியவர் அன்பில் மகேஷ் என்பது ஊர் அறிந்த உண்மை.
அன்றைய தினம் கரூருக்கு அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து வர, அனைத்து ஏற்பாடுகளையும் பின்னணியில் இருந்து செய்து கொடுத்தது அன்பில் மகேஷ்தான் என்பது திமுக வட்டாரம் அறிந்த ரகசியம். இதனால் தவெகவிற்கு அன்பில் மகேஷ் மீது எப்போதும் ஒரு குறி இருந்தது. தவெகவை பொறுத்தவரை கரூர் சம்பவம் என்பது நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட நாடகம் என்பதுதான் அவர்களின் உறுதியான கருத்தாக உள்ளது. இதன் காரணமாகச் செந்தில் பாலாஜி மற்றும் அன்பில் மகேஷ் மீது தவெக நீண்ட நாட்களாகவே ஒரு கண் வைத்திருந்தது. தற்போது கிடைத்துள்ள ஆவணங்கள் ‘அவல் பொரி கிடைத்த கணக்காக’ அமைந்துவிட்டதால், தவெக அரசு “சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று களத்தில் இறங்கிவிட்டது!