Posted in

இஸ்ரேலுக்கு எதிராக நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் 2 லட்சம் பேர் பங்கேற்ற மாபெரும் பேரணி!

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் காசா போர் மற்றும் இஸ்ரேலின் கொள்கைகளுக்கு எதிராக ‘ரெட் லைன்’ (Red Line) என்ற பெயரில் நான்காவது முறையாக மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆம்ஸ்டர்டாம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த குறைந்தது 200,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றதாக நிகழ்வின் அமைப்பாளர்கள் மற்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்ததுடன், காசாவில் நடக்கும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.

ஆ Amnesty International மற்றும் Oxfam Novib உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியில், இஸ்ரேலுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆயுத வர்த்தகங்களையும் நெதர்லாந்து அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. காசா மோதல்களால் நெதர்லாந்து மற்றும் இஸ்ரேல் இடையேயான தூதரக உறவுகளில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பொதுமக்களின் இந்தத் திரளான பங்கேற்பு அரசுக்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முக்கியச் சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மக்களின் இந்த தொடர் ஆர்ப்பாட்டங்கள் குறித்து நெதர்லாந்து அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற வட்டாரங்கள் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போராட்டத்தின் போது சில இடங்களில் சிறிய அளவில் சலசலப்பு ஏற்பட்ட போதிலும், ஒட்டுமொத்தமாகப் பேரணி அமைதியான முறையில் நிறைவடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.