இந்தியன் தாத்தா லுக்கில் 16ம் திகதி வரவுள்ள கமல்ஹசன் நேரு ஸ்டேடியத்தில் ஆடியோ லோஞ்ச்

இந்தியன் தாத்தா லுக்கில் 16ம் திகதி வரவுள்ள கமல்ஹசன் நேரு ஸ்டேடியத்தில் ஆடியோ லோஞ்ச்

வரும் 16ம் திகதி சென்னை நேரு ஸ்டேடியத்தில், மிகப் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தியன் 2 படம், மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று வருகிறது. எப்போது படம் ரிலீஸ் ஆகும் என்று மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதனை நிச்சயம் ஷங்கர் பூர்த்திசெய்வார் என்று அனைவராலும் எதிர்பார்கப்படும் நிலையில், இந்த இசை வெளியிட்டு விழா நடக்க உள்ளது.

இந்த நிகழ்வில் ரஜனி கலந்துகொண்டு சிறப்பிப்பார் என்று எதிர்பார்கப்பட்ட போதும், அவர் கலந்துகொள்ள மாட்டார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. இதனால் சங்கர் ஒரு பக்கா பிளான் ஒன்றைப் போட்டுள்ளார். ராம் சரன் மற்றும் சிரஞ்சீவி ஆகிய 2 சூப்பர் ஸ்டார்களையும் இசை வெளியீட்டு விழாவுக்கு அழைப்பது என்று முடிவாகியுள்ளதாம்.

மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம், இந்தியன் 2 படத்தை தயாரித்துள்ள நிலையில். சன் பிக்ஸர்ஸ் இதன் மீடியா பாட்னராக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.