ரத்னம் படத்தை ரத்தம் என்று சொல்லி கிண்டல் அடித்த வலைப்பேச்சு பிஸ்மி!

ரத்னம் படத்தை ரத்தம் என்று சொல்லி கிண்டல் அடித்த வலைப்பேச்சு பிஸ்மி!

சமீபத்தில் விஷால் நடித்து வெளிவந்த படம் தான் ரத்னம். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் வந்தவேளை, கில்லி ரி-ரிலீஸ் ஆகியதால், இந்தப் படம் தியேட்டர்களில் ஓட முடியாமல் போய் இறுதியாக புளொஃப் ஆகியுள்ளது. படம் முழுவது வெட்டுக் கொத்தாக இருப்பதால் இந்தப் படத்தில் ரத்தக் காட்சிகளே அதிகம் என்கிறார்கள். போதைக்குறைக்கு வலைப் பேச்சில் கூட விஷாலை கிழித்துவிட்டார்கள்.

வலைப் பேச்சில் இந்த படம் தொடர்பாக பேசும் போது ரத்னமுக்கு பதிலாக ரத்தம் என்று சொல்லி ஒரு கிண்டல் அடித்துள்ளார்கள். இது போக வலைப் பேச்சு பிஸ்மி என்ன சொல்கிறார் என்றால், படங்கள் நடிக்கும் போது நடிகருக்கு ஒரு சிக்னல் வரும். அது மக்கள் மத்தியில் இருந்து தான் வரும். இந்தமாதிரியான படங்களில் நடிக்க வேண்டாம் என்பது தான் அந்த சிக்னலாக இருக்கும். அதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

மக்கள் மனதை புரிந்துகொண்டு வேறு மாதிரியான படங்களை பண்ணீனால் மட்டுமே ஒரு நடிகரால் முன்னேறமுடியும். அது கூடத் தெரியாமல் விஷால் தொடர்ந்து அடி தடி படங்களில் நடித்து வருகிறார் என்று பேசியுள்ளார்.