தக் லைஃப் படத்தின் காதல் பாடல் 3 நாட்களாக உட்கார்ந்து தானே எழுதிய கமல்ஹசன்

தக் லைஃப் படத்தின் காதல் பாடல் 3 நாட்களாக உட்கார்ந்து தானே எழுதிய கமல்ஹசன்

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் தக் லைஃப். இதில் உலக நாயகன் கமல் ஹசன் நடித்து வருகிறார். இடை இடையே மணிரத்தினத்திற்கும் கமலுக்கு இடையே சில முரண்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. மணிரத்தினம் இப்படி நடிக்க வேண்டும் என்று சொல்ல. கமல் இல்லை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல. அரசல் புரசலாக சில சர்சைகள் வந்துபோவதாக படக் குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் திடீரென 3 நாட்களாக கமலைக் காணவில்லையாம். இதனால் படக்குழு மிரண்டுபோய் விட்டதாம். அட மீண்டும் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு கமல் சென்றுவிட்டாரா ? என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்க. 3 நாட்கள் கழித்து வந்த கமல், தக் லைஃபில் வரும் ஒரு காதல் பாட்டை, நானே இயற்றத் தான் இந்த 3 நாள் விடுமுறை எடுத்தேன் என்று சொல்லியுள்ளார்.

அப்பாடா எங்கே அவருக்கும் மணி சாருக்கும் இடையே ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருக்குமோ என்று நாம் பயந்துவிட்டோம் என்று கூறுகிறார்கள் படக் குழுவினர்.