சென்னை மெற்றோ ஸ்டேஷனில் GOAT படத்தின் முக்கிய சண்டைக் காட்சி- வியஜ் நடிக்கும் காட்சிகள் !

சென்னை மெற்றோ ஸ்டேஷனில் GOAT படத்தின் முக்கிய சண்டைக் காட்சி- வியஜ் நடிக்கும் காட்சிகள் !

சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தற்போது கோட் பட, ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படப்பிடிப்பின் சில முக்கிய காட்சிகள் சென்னை மெற்றோ நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் ஓடும் ரயிலுக்குள் வில்லனோடு மோதும் படு பயங்கரமான பைஃட் காசி ஒன்று படமாக்கப்பட உள்ளதாக, வெங்கட் பிரபுவின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மெற்றோ நிலையத்திற்கு விஜய் வருகிறார் என்றால் , என்ன ஆகும் என்பது அனைவரும் அறிந்த விடையம். இதனால் கூடுதல் பாதுகாப்பு கேட்டு சென்னை பொலிசாரை படக்குழு நாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமாக 3 நாட்கள், சென்னை மெற்றோ ரயிலில் இந்த சண்டைக் காட்சி படமாக்கப்பட உள்ளது. அதுபோக மேலும் 2 வாரத்தில் கோட் படப் பிடிப்பு முழுமையடைந்து விடும் என்று தகவல்கள் கசிந்துள்ளது.