அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான உயர்மட்ட உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, அமெரிக்காவிடமிருந்து 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் தலா 10 மில்லியன் மெட்ரிக் டன் (1 கோடி டன்) நிலக்கரியை இறக்குமதி செய்யச் சீனா முறைப்படி ஒப்புக்கொண்டுள்ளது.
வாஷிங்டனில் நடைபெற்ற இந்த மூன்று நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சி மாநாட்டின் முடிவில், இரு உலகப் பொருளாதார வல்லரசுகளுக்கு இடையிலான வர்த்தகப் போரைக் குறைக்கும் வகையில் இந்த முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிலக்கரித் தொழில்துறையை மீண்டும் மீட்டெடுப்பதாக உறுதியளித்த அதிபர் டிரம்பின் முயற்சிக்கு இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
நிலக்கரி கொள்முதல் தவிர, இரு நாடுகளுக்கும் இடையே $30 பில்லியன் மதிப்புள்ள உணர்திறன் அற்ற (Non-sensitive) நுகர்பொருட்களுக்கான வ வரிகளைப் பரஸ்பரம் குறைக்கவும் இரு தலைவர்களும் சம்மதித்துள்ளனர். இதன்படி அமெரிக்காவின் விவசாயப் பொருட்கள், கடல் உணவுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கும், சீனாவின் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பொம்மைகளுக்கும் சிறப்பு வரிச் சலுகைகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பப் பாதுகாப்பு உரையாடல்கள் மற்றும் வேளாண் சந்தை அணுகல் தொடர்பான புதிய பணிக்குழுக்களையும் அமைக்க இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன. அமெரிக்கா – சீனா வர்த்தகக் குழுவின் (US-China Board of Trade) கீழ் எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், சர்வதேசப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் எனப் வர்த்தக வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.