Posted in

சீனக் கப்பலை இடைமறித்த அமெரிக்க கடல்படை- பெரும் பதற்றம்: ஈரானுக்கு செல்ல இருந்ததா ?

📅 வெளியானது: April 21, 2026

Trump confronts Xi as US forces seize Chinese ship carrying mysterious ‘gift’ to Iran

மர்மப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, சீனாவில் இருந்து ஈரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றை, ஈரானுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் வைத்து அமெரிக்கக் கடற்படை அதிரடியாக மடக்கியுள்ளது. சீனக் கொடியுடன் பயணித்த கப்பலை அமெரிக்கா தடுத்து நிறுத்தியிருப்பது சர்வதேசச் சட்டங்களை மீறும் செயல் எனச் சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகின் சர்வதேசக் கடல் பரப்பில் எந்தத் துரும்பு அசைந்தாலும் அதைக் கண்டுபிடித்துவிடும் அமெரிக்காவின் இந்தச் செயல், பல நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் போக்காகவே பார்க்கப்படுகிறது.

குறித்த சீனக் கப்பலை உடனடியாக விடுவிக்கவில்லை என்றால், அமெரிக்கா பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் எனச் சீனா எச்சரித்துள்ளது. ஆனால், அதிபர் ட்ரம்ப்போ, “எத்தகையச் சூழலையும் எதிர்கொள்ள நாங்கள் தயார்” எனச் சற்று முன் தெரிவித்துள்ளார். சீனாவை வம்புக்கு இழுக்கும் நோக்கில் அமைந்துள்ள ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பால், அடுத்து என்ன நடக்குமோ என்று ஏனைய உலக நாடுகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.

இந்த மர்மக் கப்பலில் ஈரானுக்குத் தேவையான மிக முக்கியமான ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகள், நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய தற்கொலை ட்ரோன்கள் மற்றும் வேவு பார்க்கும் ட்ரோன்கள் இந்தக் கப்பலில் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்கா – சீனா இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

சீனக் கப்பலை அமெரிக்கா விடுவிக்கவில்லை என்றால், சீனா தனது போர்க்கப்பல்களை ஈரான் கடல் பரப்புக்கு அனுப்பத் தயங்காது. சீனப் போர்க்கப்பல்கள் அங்கு அணிவகுத்துத் தனது நாட்டு வணிகக் கப்பலுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் சூழல் ஏற்பட்டால், கடலில் ஒரு பெரும் போர் வெடிக்க வாய்ப்புள்ளது. இதனால் சர்வதேசக் கடல் வழிப் போக்குவரத்து மேலும் பாதிக்கப்படலாம். பெண் ஒருவர் ஜனாதிபதி ஆகிவிடக் கூடாது என்ற பிற்போக்குச் சிந்தனை கொண்டவர்களாலும், நிறவெறி கொண்டவர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் என்னும் நபரால், உலக அமைதிக்கு இன்று பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.