அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் நிறைவு

அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் நிறைவு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி .

இப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து, திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தபடத்தின் ஷூட்டிங் தொடங்கியது கடந்தாண்டு தொங்கி அஜர்பைஜானில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஹாலிவுட் ஸ்டைலில் விடாமுயற்சி படம் உருவாகி வருவதாகத் தகவல் வெளியான நிலையில், அஜர்பைஜானில் நடைபெற்று வந்த விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவடைந்ததாக நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

மேலும் , இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி படக்குழுவினர் வேறு இடத்திற்கு சென்று ஷூட்டிங் நடத்தவுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேறு நாட்டிற்கு விடாமுயற்சி படக்குழுவினர் செல்ல உள்ள நிலையில், எந்த நாட்டில் ஷூட்டிங் நடைபெறவுள்ளது என்ற தகவல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இப்படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாகச் சமீபதில் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.