தற்போதைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதில் பரம எதிரிகளான திமுகவும் அதிமுகவும் ஒன்றுசேரத் துணிந்துள்ளதாக வெளியாகும் செய்திகள் தமிழகத்தையே அதிரவைத்துள்ளன. ஜூன் 6-ஆம் தேதி காலை முதல் இரவு வரை திமுக தரப்பில் நடத்தப்பட்ட தொடர் ஆலோசனைகள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ரகசிய நகர்வுகள் இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றன.
திமுக – அதிமுக கூட்டணி ? அதிர்ச்சியூட்டும் மாற்றுத் திட்டம் !
விஜய்யின் எழுச்சியைத் தடுக்க, திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இணைந்து ஒரு “பொது முதலமைச்சரை“த் தேர்வு செய்யும் வினோதமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. ஸ்டாலின் தோல்வியடைந்த நிலையில், உதயநிதியோ அல்லது எடப்பாடியாரோ அந்தப் பதவியில் அமரக்கூடாது என்பதில் இரு தரப்பும் உடன்பட்டுள்ளன. மாறாக, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு பொதுவான சட்டமன்ற உறுப்பினரை முதலமைச்சராக்கி, ஆளுநரிடம் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைக் காட்டத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. ஆனால் இது எந்த அளவு சாத்தியமானது என்பது தெரியவில்லை.
இந்தத் திட்டத்தின் பின்னணியில் உள்ள பலப் பரீட்சைக் கணக்குகள் இதோ:
-
திமுக: 59 எம்.எல்.ஏ-க்கள்
-
அதிமுக: 47 எம்.எல்.ஏ-க்கள்
-
பாமக, கம்யூனிஸ்டுகள், விசிக: 12 எம்.எல்.ஏ-க்கள்
-
தேமுதிக (பிரேமலதா): 1 எம்.எல்.ஏ
-
மொத்தம்: 119 எம்.எல்.ஏ-க்கள்
இந்தக் கணக்கின் மூலம் பெரும்பான்மை பலத்தைக் காட்டி, விஜய்க்கு ஒரு “பாடம் புகட்ட வேண்டும்” என்று திமுக உடன்பிறப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அறிவாலயத்தில் இந்த வியூகம் குறித்து அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
வரலாற்றுக் கறை – திமுக தரப்பில் குமுறும் ஆத்திரம்!
சொந்தத் தொகுதியிலேயே ஸ்டாலின் படுதோல்வி அடைந்ததும், அவரை எதிர்த்து நின்றவர் கிண்டலாகக் கைகளை அசைத்து ஸ்டாலினின் அரசியல் அத்தியாயம் முடிந்தது எனக் காட்டியதும் திமுகவினரை ரத்தக் கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த அசிங்கத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத உடன்பிறப்புகள், விஜய்யைத் தடுக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளனர். இருப்பினும், எதிரும் புதிருமான திமுக – அதிமுக ஒன்றிணைந்து பொது முதலமைச்சரை அறிவிப்பது என்பது சாத்தியமா? அல்லது இது வெறும் கனவாகவே முடியுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.