சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் TVK கட்சி முன்னிலை வகிக்கிறது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் தபால் வாக்கு எண்ணிக்கையில், பெருவாரியாக TVK வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். தமிழக முதல்வர், அவரது மகன் உதயநிதி மற்றும் சேகர்பாபு உட்பட 31 முன்னாள் அமைச்சர்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்கள். அதாவது அரசு ஊழியர்களே அரசுக்கு எதிராக வாக்கு அளித்துள்ளார்கள் என்றால், நமக்குக் கிடைக்கும் செய்தி என்ன?
இதேவேளை காங்கிரஸ் மற்றும் விசிக நிலை மிக மிக பரிதாபமாக உள்ளது. காங்கிரஸ் தலைமை, TVK கட்சியோடு இணையலாம் என்று திரும்பத் திரும்பச் சொல்லியும், செல்வப்பெருந்தகை, சிதம்பரம் போன்ற நபர்கள் “இல்லை, நாங்கள் திமுகவோடு இருப்போம்” என்று கூறி காங்கிரஸைத் திசைதிருப்பியிருந்தார்கள். ஆனால் இன்று 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளை வெல்வதே மிகக் கடினமாக இருக்கிறது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பெரும் பின்னடைவைச் சந்தித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.