Posted in

6 மாதத்தில் விஜய் ஆட்சி கலைக்கப்படும்: தொண்டர்களுக்கு அடித்துச் சொல்லும் ஸ்டாலின்!

அவ்வளவுதான், முடிந்தது கதை… இன்னும் 6 மாதத்தில் விஜய் ஆட்சி கலையும் என அடித்துக்கூறியுள்ளார் ஸ்டாலின். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அவர் சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஸ்டாலின் மிகவும் காத்திரமாக இப்படிச் சொல்ல என்ன காரணம் என்று தி.மு.க வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதே போன்ற கருத்தையே அவர் கடந்த 3 தினங்களாகப் பேசி வருகிறார் என்றால், தவெக கூடாரத்தில் இருந்து ஸ்டாலினுக்கு என்ன செய்தி கசிந்துள்ளது என்பது தெரியவில்லை. எந்தச் சட்டமன்ற உறுப்பினர்களைத் திமுக குறிவைத்துள்ளது என்பதும் தெரியவில்லை. தற்போது விஜய் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆங்காங்கே சில பல ஊழல்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன என்றும் கூறப்படுகிறது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுத்தால், கம்யூனிஸ்டுகள் தமது ஆதரவை வாபஸ் வாங்கும் என்று அறிவித்துள்ளனர். இதனால் விஜய் கட்சிக்கு இருந்து வரும் ஆதரவு குறையக்கூடும். அதன் பின்னர் தற்போது விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அதிமுக தலைமைக்கே சென்றால், விஜயின் பாடு திரிசங்கு நிலைதான் என்கிறார்கள்.

இதனால் திமுக முன்னாள் அமைச்சர்கள், விஜய்க்கு ஆதரவாக இருக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களோடு பேசி, அவர்களைச் சமாதானம் செய்து, மீண்டும் அதிமுக எடப்பாடி அணியோடு இணைய அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார்கள் என்ற செய்தியும் ஒருபுறம் வெளியாகிய வண்ணம் உள்ளது. எனவே, திமுக திரைமறைவில் ஏதோ ஒரு பெரிய திட்டத்தை வகுத்துச் செயல்பட்டு வருகிறது என்பது தற்போது தெளிவாகப் புரிகிறது.