Posted in

என்ன கொஞ்ச கற்பழிப்பு- கொஞ்ச கஞ்சா மற்றும்படி ஆட்சி நல்லா தானே இருக்கு என்ற பிரேமலதா !

📅 வெளியானது: April 16, 2026

நேத்து நடந்த ஒரு பொதுக்கூட்டத்துல நம்ம ‘லேடி துரந்தர்’ பிரேமலதா அம்மையார் பண்ணுன லொள்ளு இருக்கே, அத பாத்துட்டு திமுக உடன்பிறப்புகள் எல்லாம் “அடி மடியிலேயே கை வச்சுட்டியேம்மா”ன்னு அலறுறாங்க. முதல்வர் ஸ்டாலின் ஐயா முன்னாடியே உட்கார்ந்துட்டு, “அண்ணன் ஆட்சியில மத்ததெல்லாம் ஓகே தான், ஆனா இந்த பாலியல் வன்கொடுமையும், போதைப் பொருள் கலாச்சாரமும் தான் சின்னப் பிரச்சனையா இருக்கு”ன்னு ஒரு பிட்ட போட்டுட்டாங்க. இதைக் கேட்டதும் மேடையில் இருந்த ஸ்டாலின் முகம் அப்படியே ‘பக்’குன்னு ஆயிடுச்சு. ஆனா நம்ம அம்மையார் அதைக் கூட கண்டுக்காம செம கேஷுவலா பேசிட்டு போயிட்டே இருக்காங்க.

அம்மையார் இப்படிப் பேசினதும் ஷாக் ஆன துரைமுருகன் சார், “என்னம்மா இப்புடி பண்றியேம்மா!”ங்கிற ரேஞ்சுக்கு ஒரு பார்வை பார்த்தாரு பாருங்க, அங்க தான் மேட்டரே இருக்கு. உடன்பிறப்புகள் எல்லாம் செம காண்டுல, “என்னம்மா சேம் சைட்ல சிலுப்பாங்கி கோல் போடுறீயா?”ன்னு கேக்காத குறை தான். அங்க இருந்த தொண்டர்களுக்கு எல்லாம் ரத்தம் கொதிச்சுப் போய்டுச்சு. இதனால இப்போ இவங்களுக்கு புதுசா ‘லேடி துரந்தர்’னு ஒரு பேரே கிடைச்சுடுச்சு. எதிரி கோட்டைக்குள்ள புகுந்து, அவங்களுக்கே தெரியாம வேவு பார்த்து போட்டுத் தள்ளுற கேரக்டர் தான் இந்த துரந்தர்.

விசயம் தெரிஞ்ச வட்டாரத்துல என்ன பேசுறாங்கன்னா, ஏதோ ஒரு 10 சீட்டு, அப்புறம் சில பல கோடிகளுக்காக தான் திமுக கூட கூட்டணி வச்சுருக்காங்க. ஆனா மேடை ஏறி மைக் பிடிச்சா போதும், உள்ள இருக்கிற உண்மையான பிரேமலதா வெளிய வந்து திமுகவை துவம்சம் பண்ணிடுறாங்க. இதுல ‘க்யூட்’ ஆன விஷயம் என்னன்னா, விஜய்யோட அரசியல் வருகையால வந்த நடுக்கத்துல, ஒரு ஓட்டு கூட சிதறக்கூடாதுன்னு ஸ்டாலின் ஐயா இவங்களையெல்லாம் கூட்டிட்டு வந்தா, இவங்க வந்து இப்புடி ஆப்பு வைக்கிறாங்க.

திமுக ஆரம்பிச்ச இந்த 75 வருஷத்துல இப்படி ஒரு அவல நிலையை அந்த கட்சி பார்த்ததே இல்லையாம். கூட்டணிக்கு ஆள் வேணும்னு கூட்டிட்டு வந்து, அவங்க கிட்டயே இப்படி பல்பு வாங்குறத பாத்துட்டு, ஊரே சிரிக்குது. “எதிரி வெளிய இருந்தா கூட பரவாயில்லை, இப்புடி உள்ளயே வச்சுட்டு என்ன பண்றது?”ன்னு அறிவாலயம் பக்கம் ஒரே புலம்பல் சத்தமா இருக்குது. பாவம், ஐயா எங்கே போய் முடியப் போறாரோ தெரியல!