தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் பெண்ணை ஏமாற்றிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தவெக நிர்வாகிகள் பாலமுருகன், ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணை அழைத்துச் சென்று, ஹோட்டலில் வைத்து இருவரும் கூட்டாகக் கற்பழித்துள்ளதாகக் குறித்த பெண் பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளார்.
நாங்கள் தவெக நிர்வாகிகள் என்று இவர்கள் இருவரும், அந்தப் பெண்ணிடம் தங்களை அடையாளப்படுத்தியுள்ளார்கள் என்பதில் தான் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் இப்படி ஒரு காரியத்தில் இறங்கும் ஒரு நபர், எப்படி அந்தப் பெண்ணிடம் தாம் தவெக நிர்வாகி என்று தன்னை அடையாளப்படுத்துவார்? இது மின்வெட்டு போல திமுகவினரின் திட்டமிட்ட ஒரு சதிச்செயலாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் ஏற்கனவே பரவி வருகிறது.
இல்லையென்றால், தவெக நிர்வாகிகள் இருவரை, திமுக விலை கொடுத்து வாங்கி இப்படிச் செய்யச் சொல்லியிருக்கக்கூடும் என்ற சந்தேகங்களும் எழுகிறது. இந்நீதியில் இருவரையும் உடனே கைது செய்து விசாரணை நடத்துமாறு, விஜய் உடனே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதற்கு அமைவாக இந்த இருவரும் நேற்றே கைதாகியுள்ள நிலையில், போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். ஆனால் சொல்லி வைத்தாற்போல திமுக ஊடகங்கள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துப் பெரும் பரபரப்பைத் தேடி வருகின்றன.
பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிடாத தகவல்களை எல்லாம் திமுக ஊடகங்கள் சொல்லி வருவது பெரும் சந்தேகங்களைக் கிளப்பும் வகையில் உள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எது எப்படி என்றாலும் விஜய் காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்பதனையும், தவெகவினரே இவ்வாறு செய்கிறார்கள் என்பதனையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஏதோ ஒரு சக்தி பெரும் முயற்சியில் ஈடுபடுகிறது என்பது மட்டும் கண்கூடாகத் தெரிகிறது.