Posted in

சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ-வுக்கு முக்கிய பொறுப்பு – கனிமொழி சந்தோஷுக்கு புதிய நியமனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நெறிமுறைப்படுத்தும் ‘சட்ட விதிகள் ஆய்வுக்குழு’ (Assembly Rules Review Committee) உறுப்பினராகக் கவுண்டம்பாளையம் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் நியமிக்கப்பட்டு, அவருக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையின் தினசரி நடைமுறைகள், அலுவல் விதிகளில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து திருத்தங்களைப் பரிந்துரைத்தல் மற்றும் அவையின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்தல் ஆகியவை இக்குழுவின் முதன்மைப் பணிகளாகும். வழக்கறிஞரான கனிமொழி சந்தோஷ், தவெக சார்பில் கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் பொறுப்பு குறித்துப் பேசிய கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ, “எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும், சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவேன்” என உறுதியளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தவெக உறுப்பினர்களின் எண்ணிக்கையும் செல்வாக்கும் அதிகரித்து வரும் சூழலில், சட்ட ஆய்வுக் குழுக்களில் தவெக எம்.எல்.ஏ-க்கள் அங்கம் வகிப்பது கட்சியின் அவைப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.