தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய்யை 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்துவது குறித்த பேச்சுக்கள் சூடுபிடித்துள்ளன. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, TVK மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் “2029-ல் இந்தியாவை வழிநடத்தும் தகுதி விஜய்க்கு மட்டுமே உள்ளது” எனப் பகிரங்கமாகப் பேசத் தொடங்கியுள்ளனர். இந்தத் திடீர் நகர்வு கூட்டணி வட்டாரங்களிலும் தேசிய அரசியல் களத்திலும் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
விஜய்யின் இந்த ‘பிரதமர் கனவு’ மற்றும் TVK நிர்வாகிகளின் பேச்சுகள் தேசிய அளவில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தி வரும் காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியே ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்பதில் உறுதியாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, கூட்டணிக்கு வெளியே இருந்து எழும் விஜய்யின் தேசிய அரசியல்கான் வியூகம் புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.
இப்ப விவகாரத்திற்குப் பதிலளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி. மாணிக்கம் தாகூர் MP, TVK நிர்வாகிகள் இன்னும் ‘ரசிகர் மன்ற மனநிலையிலேயே’ (Fan-club mode) செயல்பட்டு வருவதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சொந்தமாக எம்பிக்கள் இல்லாத ஒரு கட்சிக்கு இத்தகைய தேசியப் பிரதமர் ஆசைகள் இருப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும், எம்பிக்கள் வந்த பிறகு ‘இந்தியா’ கூட்டணியில் இணைவது குறித்துப் பேசலாம் என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸின் இந்த விமர்சனத்திற்குத் தவெக தரப்பில் பதில் அளித்துள்ள கட்சி நிர்வாகிகள், “நாடாளுமன்றத் தேர்தலில் வென்று எம்பிக்களுடன் தேசிய அரசியலில் வலுவாகக் களம் இறங்குவோம்” எனத் தெரிவித்துள்ளனர். மாநில அளவில் இருந்து தேசிய அளவிலான அதிகாரத்தை நோக்கிக் காய்களை நகர்த்தும் விஜய்யின் இந்த அடுத்தகட்ட அரசியல் நகர்வு, தமிழகக் கூட்டணி அரசியல் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆகியவற்றில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.