Posted in

பொலிஸ் ஸ்டேஷனில் போண்டா, டீ சாப்பிட்ட உதயநிதி! இனி தேர்தலில் போட்டியிட முடியுமா?

பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசினால், தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்கும் என்பதனை மக்களுக்கு உணர்த்தவும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பாடமாக அமையவுமே, தவெக அரசு உதயநிதியைக் கைது செய்து தஞ்சாவூர் அழைத்துச் சென்றுள்ளது. சுமார் 1 மணி நேரமாகப் பொலிஸ் வாகனத்தில் அவர் பயணித்து, இடையில் விக்ரவாண்டி அருகே உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிசார் உணவு கொடுத்துள்ளார்கள். அதனை மறுத்த உதயநிதி, தேனீர் மட்டுமே குடித்து விட்டு, போண்டா ஒன்றையும் சாப்பிட்டுள்ளார். அங்கே இருந்து வேறு ஒரு வாகனத்தை மாற்றி, மேலும் பாதுகாப்பாக அவரை பொலிசார் தஞ்சாவூர் அழைத்து செல்கிறார்கள்.

இது இவ்வாறு இருக்க, அடுத்த சட்டசபைத் தேர்தலில் உதயநிதி போட்டியிடும்போது, இந்த வழக்குப் பதிவு தொடர்பாக அவர் தேர்தல் ஆணையருக்கு முறைப்படி அறிவிக்க வேண்டும். இதனைத் தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொள்ளலாம், இல்லையென்றால் இந்த வழக்கைக் காரணம் காட்டி, அவர் வேட்புமனுவை அவர்கள் நிராகரிக்கவும், தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. இதனூடாக தமிழக அரசு உதயநிதிக்கு பெரும் செக் வைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இதேவேளை, 9 பிரிவுகளின் கீழ், உதயநிதி மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் பல தடவைகள் உதயநிதி நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். நேற்றைய தினம் தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக நிகழ்வில், முதலமைச்சர் விஜயை மிகவும் கொச்சைப்படுத்திப் பேசிக்கொண்டு இருந்தார் உதயநிதி. ஆனால் அதனை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவர் திரிஷா தொடர்பாக, அதுவும் ஒரு பெண் தொடர்பாக மிக மிக அசிங்கமான கருத்தை முன்வைத்துள்ளார். கூட்டத்தில் இருந்த திமுக தொண்டர்கள், திருஷா…. திருஷா என்று கூச்சல் போட்ட வேளை, “காவிரியில் இருந்து தண்ணீர் வரவில்லை. ஆனால் அங்கே இருந்து வருகிறது” என்று மிகவும் கீழ்த்தரமாகப் பேசியுள்ளார்.

பெண்கள் உணர்ச்சிவசப்படும் வேளை, அல்லது உடலுறவில் ஈடுபடும் வேளை வெளியாகும் ஒரு தண்ணீர் போன்ற திரவத்தைப் பற்றியே உதயநிதி பேசி இருக்கிறார். இல்லையென்றால் பெண்கள் சிறுநீர் கழிப்பதனை இவ்வளவு அசிங்கமாகப் பேசியுள்ளார் உதயநிதி. இதனை எந்தப் பெண்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக பெண்கள் அமைப்புகள், பொலிஸ் நிலையத்தில் உதயநிதிக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்துள்ளார்கள். குஷ்பு உட்பட பல பிரபலங்கள் இந்த அசிங்கமான பேச்சு தொடர்பாகக் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளார்கள்.

ஆனால் பெண்கள் உரிமை தொடர்பாகப் பேசும் கனிமொழி மற்றும் திமுக தோழமைக் கட்சிகள் மௌனமாகவே இருந்து வருகிறார்கள். எந்த ஒரு கருத்தைக்கூட சொல்ல முடியவில்லை. ஏன் என்றால், இதனை நியாயப்படுத்தவே முடியாது என்று அவர்களுக்கே நன்றாகத் தெரியும். எனவே மௌனமாக இருந்து விடுவது நல்லது என்று கருதுகிறார்கள். உண்மையில் தமிழக அரசு மிகவும் துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளது என்றுதான் கூறவேண்டும். ஏற்கனவே தமிழகப் பெண்களின் ஆதரவு திமுகவுக்கு இல்லை. இந்த நிலையில் மேலும் பெண்களை இவ்வாறு கேவலமாக எதிர்க்கட்சித் தலைவர் பேசியுள்ள விடயம், பல பெண்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

நாளை சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், சட்டமன்றத்திலும் இந்தப் பிரச்சனை நாளை எதிரொலிக்க வாய்ப்புகள் உள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரை திமுக நிராகரித்து வெளிநடப்பு செய்யவும் வாய்ப்பு உள்ளது. தவெக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளார்கள். தஞ்சை கிழக்கு பொலிஸ் நிலையத்தில் தற்போது உதயநிதி உள்ளார். கடுமையான கேள்விகளைப் பொலிசார் கேட்டு, அவர் பதில்களைப் பெற்று வருகிறார்கள். இனி தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் தலைவர்களும் பெண்களைப் பற்றி இழிவாகவும் அசிங்கமாகவும் பேச முடியாது என்று விஜய் அவர்கள் உணர்த்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்த நிலை என்றால், தமக்கு எந்த நிலை உருவாகும் என்று ஏனைய அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்வார்கள்.