இரண்டு முறை டெல்லி சென்றபோதும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார் முதல்வர் விஜய். இவர்களுக்கு இடையேயான உறவு மிக மிகச் சுமுகமாக இருப்பதாகவும், இதனால் முதல்வர் விஜய் கேட்ட பல நல்ல திட்டங்களுக்கு, நிர்மலா சீதாராமன் நிதி ஒதுக்க ஒப்புக்கொண்டதாகவும் அரசல் புரசலாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. முந்தைய ஆட்சிக்காலத்தில் திமுக உறுப்பினர்கள் நிர்மலா சீதாராமனைக் குறை கூறி வந்தார்கள், அவதூறாகப் பேசி வந்தார்கள்.
ஆனால், அப்படி ஒரு போக்கை விஜய் அரசு கையாளவில்லை. மாறாக, மத்திய அரசுடன் நல்ல அணுகுமுறையைக் கையாள ஆரம்பித்துள்ளது. இதன் வெளிப்பாடே நிர்மலா சீதாராமன் நேற்று கொடுத்த நேர்காணல் ஒன்றின் வாயிலாகத் தெளிவாகப் புலப்படுகிறது. நிருபர் ஒருவர் வேண்டுமென்றே, “முதல்வர் விஜய் அவர்கள், சட்டசபையில் சற்று அதீத போக்கைக் கடைப்பிடித்தார், அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார். நிர்மலா சீதாராமன் இதற்கு கண்டனம் தெரிவிப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் உடனே, நிர்மலா சீதாராமன் அவர்கள் “சட்டசபையில் அரசியல் பேசாமல் வேறு எங்கே சென்று அரசியல் பேசுவது?” என்று கேட்டு, விஜய் அவர்களுக்குச் சார்பான பதிலைச் சொல்லி அனைவரையும் அதிரவைத்தார். ஊழல் இல்லாத அரசு என்ற ஓர் ஒற்றைக் கருத்தை வைத்தே விஜய் அவர்கள் நிர்மலா சீதாராமனோடு காய் நகர்த்தி இருந்தார். இந்த அணுகுமுறை சீதாராமனுக்கு மிகவும் பிடித்துள்ளது. தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்று விஜய் கருதுவதை அவர் உடனே வரவேற்றுள்ளதோடு, தன்னால் முடிந்த உதவிகளை (நிதி) செய்வதாகவும் விஜய் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
இதனூடாக, தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக இருந்ததால் 8,000 கோடியை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. இதனை விடுவிக்கச் சீதாராமன் அவர்கள் முடிவு செய்துள்ளார். இருமொழிக் கல்விக் கொள்கை என்பதில் விஜய் அவர்கள் உறுதியாக இருந்தாலும், விஜய்க்காக இந்த நிதியை விடுவிக்க உள்ளார் நிர்மலா சீதாராமன். எப்படி விஜய் மத்திய நிதி அமைச்சரை, அதுவும் மிக மிக முக்கியமான அமைச்சரைத் தன்வசப்படுத்தினார்? இதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அத்தோடு, பரந்தூர் விமான நிலையத்தை வேறு ஓர் இடத்திற்கு மாற்றவும் நிர்மலா சீதாராமன் அவர்கள் சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
ஒட்டுமொத்தத்தில், தான் நினைத்த அனைத்தையும் சைலன்டாகச் சாதித்துக்கொண்டு செல்கிறார் விஜய். தமிழ்நாட்டில் மக்கள் ஒரு மாற்றத்தை உணர ஆரம்பித்துவிட்டார்கள். இந்த மாற்றத்தின் எதிரொலி, வரவிருக்கும் 6 இடைத்தேர்தல்களில் மிகவும் தெளிவாகத் தெரிந்துவிடும்.