Posted in

விவசாயி- துப்பரவு பணியாளர்கள் கையில் முதல் தேர்தல் அறிக்கையை கொடுத்த விஜய்- மிரண்டு போன எதிர் கட்சிகள்

📅 வெளியானது: April 16, 2026

சற்று முன்னர் சென்னையில் நடைபெற்ற TVK கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில், அறிக்கையின் முதல் பிரதியை ஒரு ஏழை விவசாயியின் கையில் கொடுத்து அனைவரையும் அசத்தியுள்ளார் தலைவர் விஜய். இதுநாள் வரை அரசியல் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையின் பிரதிகளை, மூத்த தலைவர்கள் முன்னிலையில் வெளியிடுவதே வழக்கமாக இருந்தது. ஆனால், அந்த மரபை உடைத்த விஜய், மக்களை வியக்க வைத்துள்ளார்.

இரண்டாவது பிரதியை ஒரு துப்பரவு பணியாளருக்கு வழங்கிய விஜய், அதனைத் தொடர்ந்து ஆசிரியை, மீனவர், நெசவாளர், இளைஞர், ஒரு தாய் மற்றும் மும்மதத்தைச் சார்ந்த நபர்கள் கையில் கொடுத்து தமிழகத்தையே அதிரவைத்துள்ளார்!

ஏனைய கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில், TVK கடைசியாகத் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் இந்த அறிக்கை மக்களிடையே ஆழமாகச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் சுட்டிக்காட்டிப் பேசிய விஜய், “இவை இரண்டுமே ஒன்றுதான்” என்றும், “எப்போதுமே செய்ய முடியாத வாக்குறுதிகளை நான் அளிக்க மாட்டேன்” என்றும் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

“தீர்க்கமாக யோசனை செய்தே இந்த தேர்தல் அறிக்கையைத் தயார் செய்துள்ளேன்” என்று கூறிய விஜய், அதில் உள்ள முக்கிய 10 அம்சங்களை விரிவாகத் தெரிவித்துள்ளார்:

  1. பெண்களுக்கு “வெற்றி மகளிர் திட்டம்”

  2. உலகத்தரம் வாய்ந்த கல்வி நிலையங்கள்

  3. போதைப்பொருள் இல்லாத தமிழகம் (யுனிவர்சல் இன்சூரன்ஸ்)

  4. இளைஞர்களுக்கு உத்தரவாதம் (சுயதொழில் தொடங்க ₹25 லட்சம் கடன்)

  5. உழவர் திட்டம் (5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் உழவர்களுக்குக் கடன் தள்ளுபடி)

  6. மீனவர் நலன் காக்கும் திட்டம் (விபத்துக் காப்பீடு ₹25 லட்சம் மற்றும் அனைத்து மீனவர்களுக்கும் வீடு)

  7. சமூகப் பாதுகாப்புத் திட்டம்

  8. அரசு ஊழியர் நலத்திட்டம் (துப்பரவு பணியாளர்களுக்குச் சம்பள உயர்வு)

  9. தமிழகத்தின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் (தமிழகத்தை AI தலைநகராக மாற்றுதல்)

  10. நேர்மையான நல்லாட்சித் திட்டத்திற்கு உத்தரவாதம்

விஜய் அறிவித்துள்ள இந்தத் தேர்தல் அறிக்கை தமிழகம் எங்கும் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்த அறிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்றும், வரவிருக்கும் தேர்தலில் அவரது கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.