குடியும் கூத்துமாக பிறந்தநாள் கொண்டாடிய விஜே பார்வதி – முகம் சுளிக்க வைக்கும் வீடியோ!

குடியும் கூத்துமாக பிறந்தநாள் கொண்டாடிய விஜே பார்வதி – முகம் சுளிக்க வைக்கும் வீடியோ!

youtube சேனலில் தொகுப்பாளராக அறிமுகமாகி பிரபலமானவர் விஜே பார்வதி. இவர் குறிப்பாக கலாட்டா தமிழ் தொலைக்காட்சியில் விஜேவவாக பணியாற்றி மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பொதுவெளியில் சென்று மக்களிடம் கேட்கக்கூடாத கேள்விகளையும் முகம் சுளிக்கும்படியான கேள்விகளை கூச்சமின்றி கேட்டும் அதன் மூலம் பிரபலமானவர் தான் விஜே பார்வதி.

அதன் பிறகு இவருக்கு திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க சினிமா நட்சத்திரமாகவும் வலம் வரத் தொடங்கினார். prank show நடத்துவதை கைவந்த கலையாக வைத்திருக்கும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் தனது 28வது பிறந்த நாளை தாய்லாந்து நாட்டில் சென்று மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தாய்லாந்தின் நியூ இயர் செலிப்ரேஷன் தினத்தில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை அடித்துக் கொண்டு விளையாடும் வினோத விளையாட்டை அவரும் விளையாடி அதன் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ முகம் சுளிக்கும் படி இருப்பதாக பல கமெண்ட் செய்து வருகிறார்கள்.