Posted in

விஜய் வென்றதற்கு சிறு பிள்ளைகள் தான் காரணம்- “அண்டா” செந்தில் வேல் அதிரடி !

தமிழகத் தேர்தலில் விஜய் ஜெயிச்சதுக்குக் காரணமே இந்தச் சின்னப் பசங்கதானாம்! “வீட்டுல இருக்குற சுட்டி  பசங்க எல்லாம் அவங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிகிட்ட அடம் பிடிச்சு, ‘விஜய்க்குத்தான் ஓட்டுப் போடணும்’னு டார்ச்சர் பண்ணியிருக்காங்க. பாசத்துல பெத்தவங்களும் வேற வழியில்லாம ‘தளபதி’க்கு ஓட்டைப் போட்டுட்டாங்க” அப்படின்னு செந்தில் ஒரே போடா போடுறாரு. இந்தச் சிறுசுகள் எல்லாம் சேர்ந்து ஒரு ‘வரலாற்றுப் பிழை’ பண்ணிட்டாங்களாம். என்னப்பா செந்தில் ?, பசங்க ஆசைப்பட்டா சாக்லேட் வாங்கிக் கொடுப்பாங்க, இது என்ன தேர்தலா இல்ல கிண்டர் ஜாய் (Kinder Joy) பொம்மையா? இப்படி ஒரு ‘பயங்கரமான’ லாஜிக்கைப் பேசி எல்லாரையும் முகம் சுளிக்க வச்சிருக்காரு.

வடிவேலு பாணி காமெடி! செந்தில் பேசுறதப் பாத்தா, “என்னை வச்சு எதுவும் காமெடி பண்ணலையே?”ன்னு வடிவேலு கேக்குற மாதிரிதான் இருக்கு. தந்தி TV-யும் தன்னோட TRP எகிறணும்ன்றதுக்காக, செந்திலை அடிக்கடி கூப்பிட்டு விவாத மேடையில உட்கார வச்சிடுறாங்க. அவர் உடனே மைக் கிடைச்சதும் “பிள்ளைகளைக் கண்டிச்சு வைக்கணும், பெத்தவங்க அவங்க பேச்சைக் கேட்டு ஓட்டுப் போட்டது தப்பு”ன்னு பிலாசபி பேச ஆரம்பிச்சிடுறாரு. இதைக் கேட்டு சிரிப்பதா இல்லை அழுவதான்னே தெரியல, ஆனா செந்தில் மட்டும் ஃபுல் ஃபார்ம்ல ‘அல்டாப்பு’ பண்ணிக்கிட்டு இருக்காரு.

மணி அடிக்கும் ‘புற்றுநோய்’ பீதி! செந்தில் பத்தாதுன்னு இதுல மணி என்ற பத்திரிகையாளர் வேற வந்து ஒரு பீதியைக் கிளப்புறாரு. விஜய்க்கு கிடைச்ச இந்த 108 சீட்டு (மேஜிக் நம்பருக்குப் பக்கத்துல நிக்கிறது) ஒரு புற்றுநோய் மாதிரியாம். “எப்ப ஆட்சி கவுந்துடுமோன்னு பயத்துலயே விஜய் இருப்பாராம், அதனால அவரால ஆட்சியில கவனமே செலுத்த முடியாதாம்” அப்படின்னு ஒரு புதுக் கதையைச் சொல்றாரு. என்னப்பா இது, ஜெயிக்காதப்போ ‘சினிமா மோகம்’னு சொன்னீங்க, இப்போ ஜெயிச்சதுக்கு அப்புறம் ‘புற்றுநோய்’னு சொல்றீங்க ?

ஒரு காலத்துல இவங்க எல்லாம்  அறிவாளின்னு நினைச்சோம், ஆனா இப்போ இவங்க பேசுறதைப் பாத்தா “டைம் ரொம்ப கெட்டுப் போச்சு”ன்னு தான் சொல்லத் தோணுது. ஒரு வழியா ‘திராவிட செம்புகளை’ ஓரங்கட்டிட்டு விஜய் ஆட்சி அமைக்க ரெடியாகிட்டாரு. ஆனா இவங்க மட்டும் இன்னும் பழைய ரெக்கார்டையே போட்டுத் தேய்ச்சுக்கிட்டு இருக்காங்க. என்னதான் அழுதாலும், புரண்டாலும் “தளபதி” இப்போ “தமிழகத்தின் அடுத்த முதல்வர்” என்பதுதான் நிதர்சனம்!

தமிழ் நாட்டில் எந்த ஒரு அரசியல்கட்சியும் போடாத திட்டங்களை போட்டு காய் நகர்த்தி, முதல்வரையே சொந்த தொகுதியில் வைத்து தோற்கடித்து, இன்று பெரிய கட்சியாக வளர்ந்து. அப்புறம்  வென்ற எம்.எல்.ஏக்களை ரிசாட்டில் கொண்டு போய் வைத்திருக்கும் விஜய்க்கு தெரியாதா ?  இன்னும் 12 ஆசனங்ள் அதுவும் நிலையான ஆசனங்கள் தேவை என்று ? இந்த தறுதலைகள் சொல்லியா புரியவேண்டும் ? விஜய் எப்பொழுது என்ன செய்வார் என்று கட்சியில் உள்ளவர்களுக்கே தெரியாது. அந்த அளவு அதிரடி காட்டு விஜய், நேற்று தனது வெற்றி எந்த அளவுக்கு இருக்கும் என்று முன்னரே புரிந்து கொண்டு, தேர்தல் முடிவு வெளியாக முன்னரே ஜான் ஆரோக்கிய சாமியை அழைத்து பேசுகிறார் என்றால். அவருக்கா தெரியாது அரசியல் ? . இவர்கள் ஏன் இப்படி பீற்றிக் கொள்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.