சற்று முன்னர் டெல்லியில் காங்கிரஸ் உயர்மட்டக் குழு பெரும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி, ஒரு முடிவை எட்டியுள்ளார்கள். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் முடிவை எடுக்க, மேலிடம் அனுமதி கொடுத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், தமிழ்நாட்டு மக்கள் விஜய்க்கு கொடுத்துள்ள ஆதரவை மனதில் கொண்டும், மதச்சார்பற்ற தன்மையை கொண்டும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்யவேண்டும் என்றும்.
திரு விஜய் அவர்கள் தங்களை தொடர்பு கொண்டு, ஆதரவைக் கோரி இருந்தார் என்றும், விஜய் அவர்கள் காமராஜரை தமது கொள்கையாளராக ஏற்றுக் கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பேச்சின் அடிப்படையில் பார்த்தால், காங்கிரஸ் மேலிடம் தாம் முடிவை எடுக்கவில்லை என்பது போலவும், ஆனால் தமிழக காங்கிரஸ் முடிவை எடுக்கட்டும் என்பது போலவும் ஒரு நழுவல் போக்கை காட்டியுள்ளது. ஆனால்…
ஏற்கனவே தமிழக காங்கிரஸுக்கு என்ன செய்யவேண்டும் என்பதனை மேலிடம் சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்களும் TVK விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நிச்சயம் ஆட்சியில் பங்கு கேட்பார்கள் என்பது தெரிந்த விஷயம். எனவே தற்போது விஜய் அவர்களுக்கு, 113 சீட் உள்ளது. மேலும் ஒரு 6 சீட் மட்டுமே தேவை. இவை இன்னும் சில நாட்களில் கிடைத்து விடும். ஆனால்…
விஜய் அவர்கள் முதல்வர் ஆவதை தள்ளி வைக்க விரும்பவில்லை. 118 என்ற பெரும்பான்மையை நிரூபிக்க 1 மாதம் கூட எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் தனிப்பெரும் கட்சி என்ற வகையில், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ், விஜய் அவர்கள் உடனடியாக முதல்வராக பதவியேற்க முடியும். எனவே 7ம் தேதி அல்லது 8ம் தேதி அவர் முதல்வராக பதவி ஏற்று, அமைச்சர்களையும் நியமித்து விடுவார். அதன் பின்னரே தனது 118 பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பார் என்று தெரிகிறது. அப்படி நடக்கவே வாய்ப்புகள் உள்ளது.