இப்படி நடகும்னு தெரிந்து தானே ஒவ்வொரு ஞாயிற்று கிழமையு கொளத்தூரில் வாக்கிங் போனேன். அப்படி இருந்து எப்படி வாக்கு போடாம விடீங்க ? என்ற முகத்தோடு இன்று கொளத்தூர் சென்ற ஸ்டாலின், ஒரு கட்டத்தில் குபீர் என அழுதுவிட்டார் !
தேர்தலில் படுதோல்வியடைந்த திமுக, அதிலும் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுப்போன அதிர்ச்சி இன்னும் ஓயவே இல்லை. அதற்குள் இன்று (05) ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூருக்குச் சென்று மக்களைச் சந்தித்துள்ளார். ஆனால் மக்கள் எவரும் அவரைப் பார்க்கப் பெரிய அளவில் வரவில்லை. சொற்ப அளவில் சிலர் கூடியிருந்த நிலையில், அவர்களைப் பார்த்துக் கண் கலங்கினார் ஸ்டாலின். இதனைப் பார்த்த சேகர் பாபு சும்மா இருப்பாரா? அவரும் உடனே அழுது அங்கே ஒரு பெரிய ‘சீன்’ போட்டார்கள் இருவரும்!
ஆனால் திமுக-வின் ஊதுகுழல் ஊடகங்கள், ஏதோ மக்கள் ஸ்டாலினைப் பார்த்து அழுதார்கள் என்றும், “ஸ்டாலின் அழ வேண்டாம்… அழ வேண்டாம்” என்று மக்கள் ஆறுதல் கூறியதாகவும் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றன. மக்கள் ஏன் ஸ்டாலினைப் பார்த்து அழுது புலம்பப் போகிறார்கள்? அவர் வேண்டாம் என்று கருதித்தானே மக்கள் அவரைத் தூக்கி எறிந்துள்ளார்கள். ஏதோ ஒரு பரிதாபத்தை மக்கள் மத்தியில் உண்டாக்கவே ஸ்டாலின் இப்படி ஒரு நாடகத்தை ஆடியுள்ளார்.
உண்மையில் அங்கே ஸ்டாலின் அழுதது, அவரது நிலையை நினைத்துத்தான். “தாம் தோற்றுவிட்டோமே” என்று நினைத்துத்தான் அழுதார், வேறு ஒன்றுமில்லை. இவ்வளவு நடந்த பிறகும் கூட, திமுக-வின் ‘செம்பு தூக்கிகள்’, விஜய் மேல் மக்களுக்கு உள்ள சினிமா மோகத்தில்தான் மக்கள் வாக்கு போட்டார்கள் என்று கொச்சைப்படுத்தி வருவதோடு, தமிழ்நாட்டு மக்களை மிகவும் கேவலப்படுத்தியும் வருகிறார்கள்.
விஜய் ஒரு சினிமா நடிகர், அவர் மேல் உள்ள ஈர்ப்பு மற்றும் மோகத்தால் மக்கள் தடுமாறி வாக்கு போட்டுவிட்டதாக திமுக ஆதரவாளர்கள் நேரலை நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார்கள். இன்றுவரை அவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவே இல்லை. உண்மையான ஒரு கட்சியாக இருந்தால், “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு; இந்த முறை மக்கள் எம்மைப் புறக்கணித்துள்ளார்கள். சரி பரவாயில்லை, மக்களுக்குப் பிடித்த ஒரு கட்சியாக, நல்ல ஆட்சியைத் தரும் வகையில் செயல்பட இன்று முதல் முயலுவோம்” என்று கூறி இருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும்.
ஆனால் இன்றும், விஜய் மீது ஈர்ப்பு, அது இது என்று திமுக செம்பு தூக்கிகள் பேசி வருவது மக்களை மேலும் எரிச்சலடையச் செய்துவிடும்.