மியான்மார் ஆமியை பேஸ் புக் தடை செய்தது: ஏன் கமல் குணவர்த்தனவை தடைசெய்ய தமிழர்கள் ஏற்பாடு செய்ய கூடாது ?

மியான்மாரில் அன் நாட்டு அரசியல்வாதிகளை ராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ள நிலையில். இதனை காரணம் காட்டி, மியான்மார் நாட்டு ராணுவ தளபதிகள் பலரது பேஸ் புக் மற்றும் ரிவீட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் பல ஆயிரம் தமிழர்களை கொலை செய்த மற்றும் யுத்தக் குற்றங்களுக்கு காரணமாக இருக்கும் ஷர்வேர்ந்திர சில்வா, கமல் குணவர்த்தன, சரத் பொன்சேகா மற்றும் கோட்டபாய ஆகியோர்களது பேஸ் புக் கணக்குகள் ஏன் இன்னும் முடக்கப்படவில்லை என்ற கேள்விகள் எழுகிறது அல்லவா ?

மியான்மாரில் அன் நாட்டு ராணுவத்தின் அடாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், தொடர்ந்து பேஸ் புக் மற்றும் ரிவீட்டர் நிறுவனங்களுக்கு அறிவித்து வந்தார்கள். கொடுக்கப்பட்ட பெரும் முறைப்பாட்டை அடுத்தே கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக, பேஸ் புக் சற்று முன்னர் அறிவித்துள்ளது. இந்த உதாரணத்தை தமிழர்கள் ஏன் கைகளில் எடுக்க கூடாது ? தற்போது இலங்கை சீன சார்பு கொள்கையில் இருப்பதால், அமெரிக்கா போன்ற நாடுகளும் கை கொடுக்குமே….