தோனி என்கிற தனி நபரைவிட.. ‘மேட்ச்’ தாங்க இப்போதைக்கு முக்கியம்..” ட்விட்டரில் கொந்தளித்த ரசிகர்கள்… ‘பரபரப்புக்கு’ என்ன காரணம்??

14 ஆவது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக அனைத்து அணிகளும் தயாராக ஆரம்பித்துள்ளது.

twitter reacts after disappointment of dhoni not play in chennai

கடந்த ஆண்டு, கொரோனா தொற்றின் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்த நிலையில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

ஆனால், அதிலும் ரசிகர்களுக்கு ஒரு சிறிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக, ஆறு மைதானங்களில் மட்டுமே அனைத்து போட்டிகளும் நடைபெறவுள்ளது. லீக் போட்டியில் ஒவ்வொரு அணிகளும் 4 மைதானங்களில் ஆடும். எந்தவொரு அணிக்கும் ஹோம் அட்வாண்டேஜ் கிடையாது. அதே போல, ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும், ரசிகர்களை அனுமதிப்பது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

twitter reacts after disappointment of dhoni not play in chennai

 

 

இந்நிலையில், ‘தோனி தன் கடைசி ஐபிஎல் தொடரை சென்னையில் ஆடுவதை விரும்பாமல் அதனை பிசிசிஐ தவிர்ப்பதாகவும், ரசிகர்களுக்கு அனுமதி இல்லையென்றால், சென்னை அணி, சென்னையிலும், மும்பை அணி, மும்பையிலும் ஆடினால் என்ன’ என்றும் ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த சிலர் கேள்வி எழுப்பியதாக ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.

twitter reacts after disappointment of dhoni not play in chennai

இதனையடுத்து, இந்த ட்வீட் அதிகம் வைரலானது. தோனிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சிலர் கமெண்ட் செய்தாலும், சிலர் அதற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஐபிஎல் போட்டிகளை விட தோனி முக்கியமில்லை என்றும், ஒருவருக்காக மொத்த போட்டிகளையும் இப்படி மாற்றி அமைக்க மாட்டார்கள் என்றும் கூறி வருகின்றனர்.

 

 

மேலும், ரசிகர்களுக்கு அனுமதி இல்லாத போது, தோனி எங்கு ஆடினால் என்ன என்றும், இது தேவையில்லாத கருத்து என்றும் சிலர் கூறி வருகின்றனர். ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்க, கிட்டத்தட்ட ஒரு மாத காலமுள்ள நிலையில், தற்போதே அதற்கான பரபரப்பு ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.