அருணாச்சலம் படத்தின்போது சுந்தர் சி-யை பளார் அறை விட்டாரா ரஜினி? உண்மையில் நடந்தது இதுதான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருணாச்சலம் படப்பிடிப்பில் படத்தின் இயக்குநர் சுந்தர் சியை அறைந்ததாக ஒரு செய்தி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் வெகுவேகமாக பரப்பப்பட்டு வருகிறது. இது எதற்காக என்பது தான் புரியவில்லை.

1997 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் அருணாச்சலம். தேவா இசையமைத்திருந்த இந்த படத்தை எம் ரத்னம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்திருந்தார்.

அன்றைய காலகட்டத்தில் அதிக வசூல் செய்த படமாக மாறியது அருணாச்சலம். பக்கா கமர்சியல் என்டர்டெயின்மென்ட் படமாக உருவான அருணாச்சலம் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் டப்பிங் செய்யப்பட்டு வெளியான மற்ற மொழிகளிலும் வசூலை வாரி குவித்தது.

இந்நிலையில் அருணாச்சலம் படப்பிடிப்பின்போது சுந்தர் சி நடந்துகொண்டது ரஜினிகாந்துக்கு பிடிக்கவில்லை எனவும், இதனால் ஒரு கட்டத்தில் உச்சகட்ட கோபமடைந்த ரஜினிகாந்த், சுந்தர் சி யை பளார் என்று அறை விட்டதாகவும் அப்போது பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது.

ஆனால் அது ரஜினிகாந்த் பெயரைக் கெடுப்பதற்காக செய்த வேலை என அப்போதே பதிலடி கொடுத்து விட்டனர். இருந்தாலும் தற்போது அந்த செய்தி வேகவேகமாக பரப்பப்பட்டு வருகிறது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என புரியாமல் கோலிவுட் வட்டாரமே தவித்துக் கொண்டிருக்கிறது.

அருணாச்சலம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் சுந்தர் சி மற்றும் ரஜினி இணைந்து ஒரு படத்தில் கூட பணியாற்றவில்லை என்பதும் கூடுதல் தகவல். இந்த பிரச்சனையை ஊதி பெரிதாக்கி விடுவார்கள் என தெரிந்தே இருவரும் பிரிந்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.