சேட்டை புடிச்ச ஆளா இருப்பாரு போல’!.. ரோஹித் வரும்போது ‘கோலி’ என்ன பண்றாரு பாருங்க.. திடீரென வைரலாகும் பழைய வீடியோ..!

பயிற்சியின் போது ரோஹித் ஷர்மாவை கேப்டன் விராட் கோலி கிண்டல் செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Kohli imitated Rohit Sharma\'s iconic pull shot at the nets

Kohli imitated Rohit Sharma's iconic pull shot at the nets

இந்த நிலையில், நேற்று கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 80 ரன்களும், ரோஹித் ஷர்மா 64 ரன்களும் எடுத்தனர். அதேபோல் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 39 ரன்களும் எடுத்தனர்.

Kohli imitated Rohit Sharma's iconic pull shot at the nets

இதனை அடுத்து 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி கோப்பையை இந்தியா வென்றது. இதில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடராஜன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Kohli imitated Rohit Sharma's iconic pull shot at the nets

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையின் போது, வலைப்பயிற்சியில் ஈடுபட வந்த ரோஹித் ஷர்மாவை, அவரைப் போலவே பேட்டிங் செய்து கோலி கிண்டல் செய்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக உலகக்கோப்பை தொடரின் போது விராட் கோலிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. அது அப்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Kohli imitated Rohit Sharma's iconic pull shot at the nets

இந்த நிலையில் இங்கிலாந்து எதிரான நேற்றைய கடைசி டி20 போட்டியில் ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி களமிறங்கி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்த கூட்டணி 94 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனை அடுத்து போட்டி முடிந்தபின் பேசிய கோலி, ரோஹித் ஷர்மாவுடனான ஓப்பனிங் பார்டனர்ஷிப் சரியாக செட்டாகிவிட்டதாகவும், டி20 உலகக்கோப்பை தொடர் வரை தான் தொடக்க ஆட்டக்காரராக விளையாட உள்ளதாகவும் கோலி கூறினார். இதனை ரோஹித் ஷர்மாவும் வரவேற்று பேசினார்.

இதனை அடுத்து சமூக வலைதளங்களில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் ஓப்பனிங் பார்டனர்ஷிப் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் புகழ்ந்து பதிவிட்டு வந்தனர். அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், விவிஎஸ் லட்சுமண் உள்ளிட்ட வீரர்களும் இவர்களது கூட்டணி குறித்து பாராட்டினர்.

இந்த நிலையில்தான் ரோஹித் ஷர்மாவை விளையாட்டாக உலகக்கோப்பையின் போது கேப்டன் விராட் கோலி கிண்டலடித்த பழைய வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு உதாரணமாக #ViratandRohit என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் நேற்று டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.