அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்…? ‘போதும்டா சாமி, இந்த நிமிஷமே வேலைய விட்டு நின்னுடுறேன்…’ – தொப்பிய தூக்கி எறிந்து வெளியேறிய பெண்…!

அமெரிக்காவின் வாஷிங்க்டனில் உள்ள ஓட்டலில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு ஒரு ஜோடி வருகின்றனர். அவர்களில் அந்த பெண்மணி மட்டும் மாஸ்க் அணியாமல் இருந்தார்

உணவு சாப்பிட வந்த பெண், இளம்பெண்ணிடம் மாஸ்க் அணியும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது, இதனை பார்த்துக் கொண்டிருந்த உணவக மேலாளர் பிரச்சனையில் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்.

ஏன் மாஸ்க் அணியவில்லை என கேட்டபோது, அதற்கு அவர், ‘மாஸ்க் அணிந்தால் எனது லிப்ஸ்டிக் அழிந்துவிடும். ஆகையால் மாஸ்க் அணியவில்லை’ என்றார். அதன்பின் உணவக மேலாளருக்கும், பெண் பணியாளருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

பொறுக்க முடியாமல் கடும் கோபத்துடன், ‘நான் எந்த தவறும் செய்யவில்லை’ என்று கூறினார். இருந்தும், மேலாளர் பெண் பணியாளரிடம் வாடிக்கையாளரிடம் மரியாதைக் குறைவாக நடந்துக் கொள்ளக் கூடாது என்று கூறினார். இதனால் கடுப்பான அந்த பெண், தான் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி தூக்கி எறிந்துவிட்டு, தான் வேலையைவிட்டு விலகுவதாக கூறினார்.

பின்னர் உடனடியாக அந்த ஹோட்டலை விட்டு வெளியேறினார். அந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.