அடுத்த சோமாலியா இலங்கைதான்… இதையும் சீனாவுக்கு விற்கும் கோத்தா அரசு.. இனி ஸ்ரீலங்கா சிங்களவர்களிற்கு சொந்தமில்லை!

சிங்கராஜ வன அழிப்பிற்கு பின்னால் சீனாவே இருப்பதாக பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரைநிகழ்த்திய போதே அவர் இதனை கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

சிங்கராஜ வனத்திற்கு அருகாமையில் இரண்டு குளங்களை அரசாங்கம் அமைப்பதாக கூறினாலும் அதனூடாக பெறப்படும் நீர் சீனப் பிரஜைகளின் தொழிற்சாலைகளுக்கே வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக, பிட்டதெனிய, கொட்டபொல, நிள்வலா, கிங்கங்கை போன்ற பிரதேசங்களில் இந்த நீர்த்திட்ட விநியோக முயற்சி எடுக்கப்படவுள்ளது.

இதனூடாக, 80 வீத நீர், சீனர்களின் தொழிற்சாலைகளுக்கும், மிகுதியான 20 வீத நீர் விவசாயிகளுக்கும் வழங்குவதே இந்தத் திட்டத்தின் உள்நோக்கம் என அவர் குற்றஞ்சாட்டினார்.