2 பிட் புல் நாய்கள் பாட்டியை றோட்டில் வைத்து கடித்துக் குதறிக் கொடூரமாக கொலை செய்துள்ளது !

பிரித்தானியாவின் வெஸ்ட் மிட்லன்ஸ் மாகாணத்தில், 85 வயதாகும் பாட்டி ஒருவரை, 2 பிட் புல் ரக நாய்கள் கடித்து குதறியுள்ளது. அவர் கீழே விழுந்த சமயம் ஒரு நாய் அவரின் கழுத்தில் கடித்து உயிரை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. அதன் உரிமையாளரை பொலிசார் கொலைக் குற்றம் சாட்டி கைது செய்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. லூசில்லா(85) என்ற பாட்டி ஒருவர் வீதியில் நடந்து சென்றவேளை. அவரை நோக்கி சீறிப் பாய்ந்த 2 பிட் புல் ரக நாய்கள், அவரை சரமாரியாக தாக்கியுள்ளது.

குறித்த சம்பவம் வெள்ளி மாலை 3.20 மணிக்கு நடந்துள்ளது. 2 நாய்களும் அவரை கடித்து குதறியே கொலை செய்து விட்டது. சம்பவ இடத்திற்கு அம்பூலன்ஸ் வந்தவேளை அவர் உயிரோடு இல்லை. இன் நிலையில் குறித்த இரண்டு நாய்களையும் ஆயுதம் தாங்கிய பொலிசார் சென்று அதனை பிடித்துச் சென்றுள்ளதோடு. அதன் உரிமையாளர் மீது கொலைக் குற்ற வழக்கை பதிவு செய்துள்ளார்கள் பொலிசார். பிட் புல் ரக நாய்கள் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் நாய்கள் ஆகும். அவை மிகவும் ஆக்ரோஷமானவை.

சிறுவர் சிறுமியரையும் அது தாக்கும். எனவே இந்த வகையான நாய்களை வளர்க்க தடை விதிக்க வேண்டும் என்று பல காலமாக பல அமைப்புகள் போராடி வருகிறது. ஆனால் பிரித்தானிய சட்டம் இதுவரை திருத்தப்படவில்லை. இனியும் எத்தனை உயிர்கள் இப்படி வீணாகப் போக உள்ளதோ தெரியவில்லை.