தி.மு.க தமிழக ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு: நாளைய தேர்தல்::::: அதிர்வின் கணிப்பு !

நாளை தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. இம்முறை தி.மு.க அமைத்துள்ள கூட்டணி மிகவும் வலுவானதாக உள்ளது. அது போக இம்முறை கலாநிதி மாறன் தொடக்கம் தென் மாவட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் அழகரி தொடக்கம் அனைவரும் ஸ்டாலினை வெல்ல வைக்க ஒரு அணியில் இறங்கி செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

இது இவ்வாறு இருக்க வாக்கு பதிவுகளை எண்ண இலகுவாக இருக்கும் என்று, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மின் வாக்குச் சாதனத்தை. தேர்தல் முடிந்த பின்னர் கொண்டு சென்று 30 நாட்கள் வைத்திருக்கப் போவதாகவும். ஏனைய சில மாநிலங்களில் தேர்தல் முடிந்த பின்னரே தமிழக முடிவுகளை தாம் அறிவிப்போம் என்று தேர்தல் கமிஷன் கூறுவது தான் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இந்த மின்னனு சாதனத்தை 1 மாதம் ஏன் வைத்திருக்க வேண்டும் ? அதில் முடிவுகளை மத்திய அரசால் மாற்ற முடியுமா ? என்ற கேள்விகள் எழுகிறது.

மத்தியில் ஆழும் ப.ஜ.க தனக்கு ஆதரவாக அ.தி.மு.காவை வெல்ல வைக்க போட்ட திட்டமா இது என்று கூடப் பேசப்படுகிறது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், பொம்மை ஆட்சி வேண்டாம் என்று. எடப்பாடி மற்றும் ஒ.பி.எஸ் ஆகியோர் மத்திய அரசின் கைப் பிள்ளையாக இருப்பது ஊர் அறிந்த விடையம்.

இதனால் தமிழ் நாட்டிற்கு நல்லதொரு தலைவர் தேவை என்றே மக்கள் கருதுகிறார்கள். அந்த வகையில் அவர்கள் தி.மு.க ஸ்டாலினை தெரிவு செய்ய வாய்ப்புகள் பெரிதும் உள்ளது. இம்முறை கணிசமான வாக்குகளை நாம் தமிழர் சீமானும், மேலும் ஒரு சில இடங்களை மக்கள் நீதி மையம் கமல் ஹாசனும் பெற வாய்ப்புகள் உள்ளது. கோவையில் கமல் ஹசன் அவர்கள் MLA ஆக பெரும் வாய்ப்புகள் உள்ளது என்றும் நாம் கணித்து உள்ளோம்.