வயதான நடிகையும் விட்டு வைக்காத சிம்பு… ஷூட்டிங் ஸ்பாட்டிலே விரட்டி விரட்டி அடித்த TR!

வயதான நடிகையும் விட்டு வைக்காத சிம்பு… ஷூட்டிங் ஸ்பாட்டிலே விரட்டி விரட்டி அடித்த TR!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஒரு கலக்கு கலக்கியவர் தான் டி ஆரின் மகனான சிலம்பரசன். இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என தமிழ் சினிமா மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகராக பார்க்கப் பட்டார். தனது அப்பா டி ராஜேந்திரன் இயக்கிய பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கி வந்தார் சிம்பு.

அதன் மூலம் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி பின்னர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாகி பின்னர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இடத்தைப் பிடித்தார். இந்த நிலையில் சிறுவயதாக இருந்தபோது டிஆர் இயக்கிய படம் ஒன்றில் நடிகை கௌதமி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

அப்படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு குழந்தை நட்சத்திரமாக ஒரு காட்சியில் நடித்தாராம். அப்போது நடிகை கௌதமியிடம் சிம்பு சில்மிஷம் ஒன்றை செய்து அது டி ராஜேந்தருக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகப்பெரிய அவமானம் ஆகிவிட்டதாம். அந்த சமயத்தில் சிம்புவை துரத்தி துரத்தி விரட்டி விரட்டி அடித்தாராம் ஷூட்டிங் ஸ்பாட்டிலே.

பின்னர் வீட்டுக்கு சென்று மனைவி உஷாவிடம் இதை கூற மனைவி உஷாவோ… மகனை நீங்கள் தானே நடிக்க வைக்கிறீர்கள் ஏன் இப்படி காட்டுமிராண்டித்தனமாக சூட்டிங் ஸ்பாட்டில் பலர் முன்னாடி அடித்தீர்கள். அவரைக் கேட்டு திட்டி இருக்கிறார். இந்த விஷயம் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது பிரபல விமர்சகர் ஒருவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறார். இது சிம்புவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இப்படி திட்டமிட்டு பேசி இருப்பதாக அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.