சீரியல் நடிகையுடன் சில்மிஷம், வசமாக மாட்டிய டிவி vj.. மறைத்த மனைவியை மேடைக்கு மேடை

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன அந்த தனியார் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் அந்த vj. இவருக்கு திருமணம் ஆனதே கடந்த சில மாதங்களாகத் தான் ரசிகர்களுக்கு தெரியும்.

அதற்கு காரணம் தொகுப்பாளர் பணிக்காக தன்னுடைய மனைவியை கிட்டதட்ட 5 முதல் 6 வருடங்கள் வரை மறைத்து வைத்து இருந்தாராம். அதாவது பொது நிகழ்ச்சிகளுக்கு எங்கேயும் செல்லாமல் சிங்கிளாக இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி விட்டாராம்.

இதன் காரணமாகத்தான் அவருக்கு சினிமா வாய்ப்புகள் டிவி வாய்ப்பு கிடைப்பதாக நம்பியுள்ளார். அவர் எதை நம்பினாரோ அதுவே அவருக்கு வினையாக மாறியுள்ளது. சமீபத்தில் அதே தொலைக்காட்சியில் நடிகையாக வலம் வந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் அதற்கு காரணம் அந்த நடிகையுடன் தனிமையில் இனிமை கண்ட இந்த தொகுப்பாளர் அதை வீடியோ எடுத்து வைத்து அந்த நடிகையை மிரட்டி வந்ததாகவும் செய்திகள் பரவ ஆரம்பித்தன. இந்த விஷயத்தில் அந்த தொகுப்பாளரின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகி விட்டது.

இதன் காரணமாக வேறு வழியின்றி அந்த பிரச்சனைகள் நடந்துகொண்டிருக்கும்போதே தனக்கு திருமணமானதை புகைப்படத்துடன் வெளியிட்டார் அந்த தொகுப்பாளர். மீடியாவுக்காக சொந்த மனைவியையே மறைத்து வைத்து விட்டாரே என பலரும் பேச ஆரம்பித்துவிட்டனர். அந்த விஷயத்திற்கு பிறகு உஷாரான அந்த தொகுப்பாளர் தற்போது எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்றாலும் தன்னுடைய மனைவியை கூட்டிப் போகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் அவரை மேடையில் ஏற்றி இவர்தான் என்னுடைய வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம் எனவும் விளம்பரப்படுத்தி வருகிறார். இதே தொகுப்பாளர் சக பெண் தொகுப்பாளர் ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகக்கூட ஒரு செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆக மொத்தத்தில் பெண்கள் தான் நமக்கு வீக்னஸ் என்பதை புரிந்துகொண்ட தொகுப்பாளர் தற்போது மனைவியே கதி என கிடக்கிறாராம்.