இது என்ன புதுசா இருக்கு’… ‘சூரியன் நமது தலைக்கு மேலே இருக்கும்’… நிழல் இல்லா நாட்கள் ஏற்படும் நகரங்கள்!

தமிழகத்தில் நிழல் இல்லா நாள் ஏற்படும் நகரங்கள் குறித்த அறிவிப்பை எனத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது.

On these two days Tamilnadu observes Zero Shadow Day

தமிழகத்தில் தேதி வாரியாக நிழலில்லா நாள் ஏற்படும் நகரங்களைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்.10, செப்.1-ம் தேதி கன்னியாகுமரி, நாகர்கோவில், கூடங்குளம், ஏப்.11, ஆக 31-தேதிகளில் கோவளம், திருவனந்தபுரம், திருச்செந்தூர், ஏப்.12, ஆக.30-ம் தேதிகளில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஏப்.13, ஆக.29-ம் தேதிகளில் சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், ஏப்.14, ஆக.28-ம் தேதிகளில் கம்பம், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், பரமக்குடி, ஏப்.15, ஆக. 27-ம் தேதிகளில் தேனி, ஆண்டிபட்டி, திருமங்கலம், மதுரை, சிவகங்கை, காரைக்குடி.

On these two days Tamilnadu observes Zero Shadow Day

ஏப்.16, ஆக.26-ம் தேதிகளில் வால்பாறை, கொடைக்கானல், திண்டுக்கல், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம், ஏப்.17, ஆக.25-ம் தேதிகளில் பாலக்காடு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, பழநி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, ஏப்.18, ஆக. 24-ம் தேதிகளில் கோவை, கூடலூர், பல்லடம், திருப்பூர், காங்கயம், கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார்.

ஏப்.23, ஆக.19-ம் தேதிகளில் ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கடலூர், ஆம்பூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கேளம்பாக்கம், ஏப்.24, ஆக.18-ம் தேதிகளில் குடியாத்தம், வேலூர், ஆற்காடு, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி, சென்னை ஆகிய நகரங்களில் நிழல் இல்லா நாட்கள் ஏற்படும்.

Contact Us