புத்தாண்டு தினத்தில் யாழ்ப்பாணத்தில் பெரும் துயரம்; இதயம் பலவீனமானோர் வாசிக்க வேண்டாம்!

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8 வயது சிறுவன் இயக்கிய நிலையில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதி குழந்தை உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக தொியவருவதாவது, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சிறுவன் இயக்கியுள்ளான். இதன்போது மோட்டார் சைக்கிளுக்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயதான குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனையடுத்து குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை 8 வயது சிறுவனின் சகோதரியாகும். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us