தற்போது தற்காலிக இடம்- மகாராணி இறந்த பின்னர் உடல் மகாராணியாருக்கு அருகே மாற்றப்படும் !

லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ள சென் ஜோர்ஜஸ் தேவாலய வழாகத்தில், 24 அரச குடும்ப உறுப்பினர்கள் உடல்களோடு பிலிப் உடலும் தற்காலிகமாக புதைக்கப்பட்டுள்ளது என்றும். பிரித்தானிய மகாராணி இறக்கும் தறுவாயில். அவரது உடலுக்கு பக்கமாக பிலிப் அவர்களின் உடல் மாற்றப்படும் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மிக மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு அரச குடும்பமாக பிரித்தானிய ராஜ குடும்பம் இருக்கிறது.

இளவரசர்கள் இறந்தால் எங்கே புதைப்பது. மகாராணி அல்லது மன்னர் இறந்தால் எங்கே புதைப்பது. அது எப்படி இருக்கவேண்டும் என்று பல நுணுக்கமான கட்டுப்பாடுகள் உள்ளது. அந்த வகையில் தற்போது மகாராணியாரின் கணவர் இளவரசர் பிலிப் அவர்கள் தற்காலிக இடம் ஒன்றில் தான் புதைக்கப்பட்டுள்ளார். இதனை இலகுவாக இடமாற்றம் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

நேரடியாக அரச குடும்ப வாரிசுகளாக பிறக்கும் நபர்கள் புதைக்கப்படுவது தொடக்கம். அவர்கள் வெளி இடத்தில் திருமணம் முடித்தால் அவர்கள் துணை இறக்கும் போது எங்கே புதைக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல விடையங்கள், ஒரு சட்ட திட்டத்தை போல பல நூறு வருடங்களாக இருந்து வருகிறத். தனது அம்மாவின்(டயானா) இறுதி ஊர்வலத்திற்கு பின்னதாக, ஹரி கலந்துகொள்ளும் பெரிய இறுதி ஊர்வலம் இதுவாகும். அரச குடும்பம் என்றால் என்ன ? அங்கே அவர்களுக்கு எப்படி மரியாதை வழங்கப்படுகிறது என்பதனை அவர் நிச்சயம் கண்டிருப்பார். அரச குடும்பத்தை வெறுத்து ஒதுக்கிவிட்டு அமெரிக்காவில் வாழும் ஹரி, இந்த இறுதி ஊர்வலத்தை பார்த்து திகைத்து பல இடங்களில் அங்கலாய்த்ததை காண முடிந்ததாக தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

Contact Us