சன்னி லியோன் படத்தில் தமிழ் காமெடி நடிகர்.. கொண்டாட்டத்தில் ஜொள்ளு பார்ட்டி

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி நடிகர்களாக கலக்கிக் கொண்டிருந்த கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற நடிகர்களுடன் ஒப்பிடும்போது யோகி பாபு மட்டுமே தற்போது நிறைவான காமெடி காட்சிகளை கொடுத்து வருகிறார்.

அதேபோல் நடிகர் சூரி ஒரு குறிப்பிட்ட இயக்குனர்களின் படங்களில் நடிக்கும்போது மட்டும் நன்றாக காமெடி செய்கிறார். ஆனால் சில படங்களில் இவர் எல்லாம் எப்படி காமெடி நடிகராக மாறினார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவிற்கு நடித்து வருகிறார்.

இந்நிலையில் உலக சினிமாவையே மிரட்டி வைத்த சன்னி லியோன்(Sunny Leone) தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இனிமேல் அந்த மாதிரி படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் சில வருடங்களுக்கு முன்பு சபதம் எடுத்துள்ளார்.

ஆனால் சினிமாவை பொறுத்தவரையில் கவர்ச்சிக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை. அந்தவகையில் அடுத்ததாக தமிழில் ஒரு புதிய ஹாரர் காமெடி படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் அவருடன் இணைந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என நினைத்துக்கொண்டிருக்கும் சதீஷ் நடிக்க உள்ளார்.

சும்மாவே நடிகைகளைப் பார்த்தால் ஜொள்ளு விடும் சதீஷ் சன்னி லியோனுடன் நடிக்கும்போது சும்மா இருப்பாரா என்ன. ஏதாவது சில்மிஷம் செய்து மாட்டிக் கொள்ளப் போகிறார் என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.

சமீபகாலமாக சதீஷ் நடிக்கும் படங்களில் காமெடி வருகிறதோ இல்லையோ படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வெறுப்பும் கோபமும் ஏற்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு தரமில்லாத காமெடியை கொடுத்து வருகிறார்.

 

Contact Us