உறவினருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டதாக மனைவியை கொன்ற கணவன்!

பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமண ராஜா, இவர் விவசாயி. இவரது மனைவி சரண்யா. இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் முடிந்த நிலையில், 5 வயது மகன் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக லக்ஷ்மண ராஜாவின் மனைவிக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறின் போது, ஆத்திரமடைந்த லட்சுமணராஜா அரிவாளால் சரண்யாவை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். பின்னர், கோட்டூர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார்.

தகவலறிந்த கோட்டூர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தடயங்களை சேகரித்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லட்சுமண ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us