இந்தியாவிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேறுங்கள்” – அமெரிக்கா அறிவுரை சற்றுமுன் வழங்கியது !

கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் அமெரிக்கர்கள் விரைவில் இந்தியாவை விட்டு வெளியேற அமெரிக்கா அரசு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கா தூதரகத்தை சேர்ந்த சுமார் 100 பேருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க அரசு இந்த அறிவுரையை வழங்கியுள்ளது. கொரோனா பேரலையாக பரவி வருவதால் அதற்கேற்ற மருத்துவ வசதிகள் இந்தியாவில் இல்லை. எனவே அமெரிக்கர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா அரசு கூறியுள்ளது.

பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஹாங்காங் ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டவர்கள் இ்ந்தியா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன. இந்தியாவில் உள்ள தங்கள் மக்கள் கூடிய விரைவில் தாயகம் திரும்ப வேண்டும் என்றும் அவை அறிவுறுத்தியுள்ளன

Contact Us