2009-ல் தமிழர்கள் கொல்லப்பட்டதைவிட மோசமாக எங்கும் பிணக்குவியல்; இந்தியா அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்தருளும் இறைவா!

எத்தனை உடல்கல் இவ்வாறு ஒதுங்கின என்பதை பற்றி மாவட்ட நிர்வாகம் வாய்திறக்காமல் மவுனம் காக்கிறது. ஆனால் உடல்களுக்கான இறுதிச் சடங்குகள் போலீஸ் முன்னிலையில் மாவட்ட நிர்வாகம் நடத்தியதாக நிர்வாகம் தெரிவித்தது.

ஏற்கெனவே நூற்றுக்கணக்கான உடல்கள் உபி.யிலிருந்து பீகார் கங்கையில் மிதந்ததில் 71 உடல்கள் மீட்கப்பட்டன, இவற்றில் பெரும்பாலான உடல்களை ஒரே குழியில் போட்டு எரித்ததும் நடந்தது. இன்னும் இந்த உடல்கள் எங்கிருந்து வந்தன, யார் இதன் உறவினர்கள், கோவிட் மரணமா என்பதெல்லாம் கண்டுப்பிடிக்க முடியாமல் உ.பி.நிர்வாகம் திணறி வருகிறது.

இந்நிலையில் நாஹ்ரி பகுதியில் பாலியா-பக்சார் பாலத்தின் கீழ் மே10-ம் தேதி அடையாளம் தெரியாத சில உடல்கள் கிடந்ததாக மாவட்ட மேஜிஸ்ட்ரேட் அதிதி சிங் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது அழுகிய உடல்கள் இறந்து பல நாட்களான உடல்கள் போல் தெரிகிறது என்றார். உடல்கள் எங்கிருந்து வந்தன, எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது போன்றவற்றை விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக உள்ளூர் மற்றும் ஆங்கில ஊடகங்கள் நிர்வாகத்திடம் கேட்டும், எத்தனை உடல்கள் என்ற எண்ணிக்கை விவரங்களை வெளியிடவில்லை. இது தொடர்பாக இந்தப் பகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி தலைவர் நராத் ராய் கூறும்போது, “உண்மையில் எத்தனை உடல்கள் மிதந்தன என்பதை மறைப்பதால் ஒரு பயனும் இல்லை. உள்ளூர் மக்கள் விழிப்புடன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்” என்றார்.

கிராமங்களில் இறப்பவர்களை மரியாதையுடன் எரிக்கவோ புதைக்கவோ நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும், இப்படி தண்ணீரில் அமிழ்த்த அனுமதிக்கக் கூடாது என்றார் சமாஜ்வாதி தலைவர்.

செவ்வாயன்று காஜிப்பூரில் 24 உடல்கள் கங்கையில் மிதந்தன. இதுவரை இந்த உடல்கள் எங்கிருந்து வந்தன், யாருடையது, கொரோனா நோயினால் இறந்தவர்களா என்று எதையும் கண்டுப்பிடிக்க முடியாமல் உ.பி. நிர்வாகம் திணறுகிறது.

இத்தனைக்கும் கங்கைநதியின் இருகரைகளிலும் கடும் கண்காணிப்புப் போடப்பட்டுள்ளதாக மாவட்ட மேஜிஸ்ட்ரேட் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உன்னாவில் எண்ணிக்கை தெரியாத அளவில் சில உடல்கள் மண்ணில் புதைக்கப்பட்டது தெரியவந்தது அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உடல்களும் கோவிட்-19 பலி உடல்களா என்பதும் தெரியவில்லை. நதியில் விட்டெறியப்படும் உடல்கள், மண்ணில் புதைக்கப்படும் உடல்கள் என்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயங்கரங்கள் தொடர்கின்றன.

Contact Us