மடு பிரதேச செயலக ஊழியர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அதிருப்தி!

இலங்கையில் அரச ஊழியர்களின் செயற்பாடு தொடர்பில் பொது மக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது உண்மையான தலைமைத்துவம் இல்லாத குடும்பங்களுக்கு பெரும்பாலும் உதவிகள் செல்வதில்லை, மாறாக சில அரச அதிகாரிகள் அந்த பணத்தை எடுப்பதும், தங்களுடன் இசைவாக இருப்பவர்களுக்கு உதவிகளை வழங்குவதுமே இவர்களின் வேலையாக இருக்கின்றது, தற்போது சமூர்த்தியும் அப்படித்தான் கொடுக்கப்படுகிறது.

இப்படியான சூழலுக்குள் நியாயமற்று, நேர்மையற்று, நடக்கும் பிரதேச செயலகத்திற்குள் மடு பிரதேச செயலகமும் ஒன்று என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரசின் எந்த உதவி திட்டங்களுக்குள்ளும் சரியான, நியாயமான பயனாளர்கள் தெரிவுகள் இல்லை, என்பதுடன் இது இறுதியாக கொடுக்கப்பட்ட 5000 ரூபாய் கொடுப்பனவிலும் பிரதிபலித்தது என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சில கிராம சேவகர்கள் அனைத்து விதங்களிலும் சரியான முறையில் நடந்துகொள்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை, அதே நேரம் மோசடி கும்பல் இல்லையென்பதை தவிர்ப்பதற்குமில்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Contact Us