கோலி’ – ‘அனுஷ்கா’ வைத்த ‘கோரிக்கை’.. “எவ்ளோ சொல்லியும் கேக்க மாட்டாங்க போல..” நெட்டிசன்களை கடுப்பாக்க வைத்த ‘சம்பவம்’!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

fans slams papparazi for clicking vamika picture at airport

இதற்காக, இந்தியாவில் கடந்த 10 நாட்களுக்கு மேல் தனிமைப்பட்டிருந்த இந்திய வீரர்கள், நேற்று இரவு இங்கிலாந்து கிளம்பிச் சென்றனர். அங்கும் அடுத்த சில நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள், தங்களது குடும்பத்தினருடன் இங்கிலாந்து செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma) குறித்த பிரச்சனை ஒன்று, தற்போது உருவாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்திருந்தது.

இதுபற்றி அறிவிப்பை வெளியிட்ட அவர்கள், தங்களது குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டப்பட்டு உள்ளதாகவும், தங்களது குழந்தையின் புகைப்படம் மற்றும் அவர் குறித்த செய்திகளை அதிகம் வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர். சமீபத்தில் கூட, ரசிகர் ஒருவர் வாமிகா பற்றி கேள்வி எழுப்பிய நிலையில், தனது மகளை தற்போது சமூக வலைத்தளங்களில் காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன் என கோலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்காக இந்திய கேப்டன் விராட் கோலி, தனது மனைவி மற்றும் மகளுடன் இங்கிலாந்து கிளம்பிச் சென்றிருந்தார். அப்போது விராட் மற்றும் அனுஷ்கா ஆகியோரின் கோரிக்கையை மீறி, வாமிகா குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி அதிகம் வைரலாகி வருகிறது.

விமான நிலையத்தில் அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் குழந்தையிடம் செல்வதைப் பார்த்த அங்கிருந்த ரசிகர்கள், வாமிகாவின் புகைப்படத்தை எடுத்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளார்கள். அந்த சமயத்தில் அனுஷ்கா ஷர்மா தனது குழந்தையின் முகத்தை மறைத்தபடி தூக்கி சென்றார்.

இது இணையதளங்களில் அதிகம் வைரலான நிலையில், பல நெட்டிசன்கள் மற்றும் விராட் கோலியின் ரசிகர்கள், இது தொடர்பாக புகைப்படம் எடுத்து வெளியிட்டவர்களை அதிகம் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

மகளின் முகத்தைக் காட்டக் கூடாது என பெற்றோர்கள் கேட்டுக் கொண்ட போதும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், இப்படி செய்ய எப்படி மனம் வருகிறது என்றும், உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

Contact Us