அயல்வீட்டுக்காரருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியால் 8 பேர் வைத்தியசாலையில்; நடந்தது என்ன?

கொழும்பு-பொரள்ளையில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் படுகாயமடைந்து வைத்தியயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் “கொஹொமத சுது” (எப்படி இருக்கின்றாய் சுது) என அனுப்பப்பட்ட ஒரு குறுஞ்செய்தியால் ஏற்பட்டுள்ளது என தகவல் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றது.

ஒரு பெண் தனது தொலைபேசியிலிருந்து அயல் வீட்டு நபருக்கு “கொஹொமத சுது” (எப்படி இருக்கின்றாய் சுது) என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

மேலும் இதை அறிந்த குறித்த பெண்ணின் 35 வயதுடைய கணவர், அது யாருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி? என்று கேட்டுள்ளார்.

இதற்கு ​​அந்த பெண் இந்த குறுஞ்செய்தி தவறுதலாக அனுப்பப்பட்டதாக என கணவரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த நபர் 25 வயதான அயல் வீட்டாரிடம் தனது மனைவியுடன் ஏதேனும் உறவு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் இந்த இருவருக்கும் இடையிலான விவகாரம் பின்னர் சிக்கிக் கொண்டது மற்றும் இரு குடும்பங்களின் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கி ஒரு மோதலை தூண்டியது.

அத்தோடு இதில் குறித்த பெண்ணின் கணவரும் அயல்வீட்டு நபரும் கத்தி குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Contact Us