தற்போது பேர்ள் கப்பலிலிருந்து கரையொதுங்கும் கழிவுகள்- ஆரம்பமானது சிக்கல்- கரையில் சிங்களவர் …

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கழிவுகள் கரையொதுங்கிய 129 இடங்கள் இதுவரையில் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளிலிருந்து 40 கொள்கலள்களில் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் , ஒரு கொள்கலனின் எடை 20 தொன் எனவும் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹண்டாபுர தெரிவித்தார். கப்பலில் 1,460 கண்டேனர்கள் இருந்துள்ளது. இதில் ஒரு சில கண்டேனர்களில் இருந்து வெளியாகும் கசிவு தான் இவை.. இன்னும் மொத்தமாக கசிய ஆரம்பிக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க. தாம் எல்லாக் கழிவுகளையும் அகற்றி விட்டது போல செய்திகளை போடுகிறது பல சிங்கள ஊடகங்கள். எல்லாமே கோட்டாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது…

மே மாதம் 26 ஆம் திகதி முதல் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து பொருட்கள் கரையொதுங்கிய 129 இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சில இடங்களில் கடல் அலையினால் மீண்டும் மீண்டும் பொருட்கள் கரையொதுங்குவதால் அவ்வாறான இடங்களை தினமும் தூய்மைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தூய்மைப்படுத்தும் பணிகளில் முப்படையினர் உள்ளிட்ட ஏனைய குழுக்களைச் சேர்ந்த 6,400 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரையில் 40 கொள்கலன்களில் கரையொதுங்கிய பொருட்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு கொள்கலனின் எடை 20 தொன் ஆகும். அதற்கமைய இதுவரையில் எந்தளவிற்கு கழிவுகள் சேமிக்கப்பட்டுள்ளன என்பதை கணிப்பிட முடியும்.

Contact Us