முள்ளிவாய்க்கால் பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம்; அச்சமடைந்த மக்கள்!

முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் .

நேற்று பிற்பகல் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் தெரிவித்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்றபோது குறித்த பகுதியில் இராணுவத்தினர் குண்டு ஒன்றைச் செயலிழக்கச் செய்தமை தெரியவந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதி மணல் தரையிலிருந்து மீட்கப்பட்ட குண்டு ஒன்றே இவ்வாறு இராணுவத்தினரால் தகர்க்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆங்காங்கே காணப்படும் வெடிபொருட்களை மீட்கும் இராணுவத்தினர் அதிரடிப்படையினர், பொலிஸாருடன் இணைந்து நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாகச் செயலிழக்கச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Contact Us